வித்தியாசத்தை நேசித்து படிப்படியாக வளர்ந்த நடிகர் பார்த்திபனின் சொத்து விபரம் பற்றி தெரியுமா?
பாக்யராஜிடம் துணை இயக்குனராக பணியாற்றி சினிமாவில் பன்முகத்திறமையுடன் ஜொலிக்கும் நடிகர் பார்த்திபனின் சொத்து விபரம் தற்போது வெளியாகியுள்ளது.
நடிகர் பார்த்திபன்
தமிழ்த்திரையுலகில் பன்முகத்திறமைகளைக் கொண்டு இருக்கும் நடிகர் பார்த்திபன்.
80மற்றும் 90களில் சுப்பர் ஹிட் படங்களைக் கொடுத்து வந்த பார்த்திபன் 2022ஆம் ஆண்டு இரவின் நிழல், பொன்னியின் செல்வன் போன்ற படங்களில் பார்த்திபன் தன் நடிப்பு, இயக்கம் இரண்டிலும் அதீத பாராட்டுகளைப் பெற்றிருக்கிறார்.
மேலும், இவர் இயக்கி நடித்த இரவின் நிழல் திரைப்படம் 100இற்கும் மேற்பட்ட விருதுகளையும் பெற்றது. மேலும், இவர் 15 படங்களை இயக்கியிருப்பததோடு 50 இற்கும் அதிகமான படங்களிலும் நடித்திருக்கிறார்.
சொத்துமதிப்பு
நடிகர் பார்த்திபனிடம் சென்னை திருவான்மியூரில் 9 கோடி மதிப்பிலான பிரமாண்ட வீடு ஒன்று வைத்திருக்கிறார் அந்த வீட்டிலேயே ஒரு பகுதியில் அலுவலமாகவும் வைத்திருக்கிறார்.
மேலும், இவர் ஒரு படத்திற்கு 50 இலட்சம் சம்பளம் வாங்குகிறார். நடிப்பு, இயக்கம் என்பது மட்டுமில்லாது புத்தகங்கள் எழுதுவதன் மூலம் வருமானம் வருகிறது.
மேலும், இவருக்கு சொந்தமாக தயாரிப்பு நிறுவனம் ஒன்றை வைத்து அதிலும் வருமானம் பார்க்கிறார். இவரிடம் சுமார் 30 இலிருந்து 40 கோடிகள் வரைக்கும் தான் சொத்து சேர்த்து வைத்திருக்கிறார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |