நான் இன்னும் இறக்கவில்லை: யூடிப்பில் வெளியான போலி செய்திக்கு தன் பாணியில் பதிலளித்த பிரபல நடிகர்!
நடிகரும், இயக்குனருமான பார்த்திபன் இறந்து விட்டதாக சமூக வலைத்தளங்களில் வெளியாக போலி தகவல்களுக்கு வித்தியாசமானமுறையில் பதிலளித்திருக்கிறார்.
நடிகர் பார்த்தீபன்
தமிழ்த்திரையுலகில் பன்முகத்திறமைகளைக் கொண்டு இருக்கும் 80மற்றும் 90களில் சுப்பர் ஹிட் படங்களைக் கொடுத்து கொடிக்கட்டி பறந்தவர் நடிகர் பார்த்தீபன்.
மேலும், 2022ஆம் ஆண்டு இரவின் நிழல், பொன்னியின் செல்வன் போன்ற படங்களில் பார்த்திபன் தன் நடிப்பு, இயக்கம் இரண்டிலும் அதீத பாராட்டுகளைப் பெற்றிருக்கிறார்.

இவரின் புது முயற்சிகள் எப்போதும் தோற்றதில்லை என்பதற்கு ஆதாரமாக ஒத்த செருப்பு திரைப்படத்திற்கு ஏகப்பட்ட விருதுகளும் இறுதியாக வெளிவந்த இரவின் நிழல் திரைப்படத்திற்கும் கிடைத்த வரவேற்பே போதுமானது.
மேலும், இவர் கையாளும் புது முயற்சிகளாலும், வித்தியாசமான நடிப்பாலும் தான் அதிக வெற்றிகளைப் பெற்று வருக்கிறார்.
போலி செய்தி

பொதுவாகவே சமூக வலைத்தளம் ஒரு கட்டுக்குள் இல்லாமல் பல போலி தகவல்கள் பரப்பப்பட்டு வருகிறது.
இதில் அதிகம் பாதிக்கப்படுவது சினிமா திரைப்பிரபலங்கள் தான். இவருக்கு இவருடன் உறவு, மரணச் செய்தி போன்ற பல தகவல்களை வெளியிட்டு அவர்களையும் பார்வையாளர்களையும் மனசஞ்சலத்திற்குள் ஆளாக்கிவருகின்றனர்.
அந்தவகையில்தான், நடிகர் பார்த்தீபன் இப்போது இறந்துவிட்டார் என்ற செய்தி யூடியூபில் வைரலாகி வருகிறது. இந்த போலி செய்தி குறித்து நடிகர் பார்த்திபன் தனது டுவிட்டரில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.
நொடிகள் மரணமடைவதும்,மறுபடியும் அடுத்ததாய் உயிர்த்தெழுவதும் இயற்கை! நடிகன் பற்றிய செய்திகள் இப்படி ஊர்வலமாவதன் காரணம் புரியவில்லை! Negativity-ஐ பரப்ப இதுபோல் சில நண்பர்கள் இருக்கிறார்கள்.மகிழ்ச்சியை மனதில் நிரப்புவோம் மக்களுக்கும் பரப்புவோம்! https://t.co/JmQqrxFL9K
— Radhakrishnan Parthiban (@rparthiepan) January 23, 2023
அதில், நொடிகள் மரணமடைவதும், மறுபடியும் அடுத்ததாய் உயிர்த்தெழுவதும் இயற்கை! நடிகன் பற்றிய செய்திகள் இப்படி ஊர்வலமாவதன் காரணம் புரியவில்லை! Negativity-ஐ பரப்ப இதுபோல் சில நண்பர்கள் இருக்கிறார்கள். மகிழ்ச்சியை மனதில் நிரப்புவோம் மக்களுக்கும் பரப்புவோம் என பதிவிட்டிருக்கிறார்.