சாதி, மதமற்றவர் என்ற சான்றிதழை பெற்றார் நடிகர் பார்த்திபன்
நடிகர் பார்த்திபன் எந்த சாதியையும் மதத்தையும் சார்ந்தவர் இல்லை என்று தற்போது சான்றிதழ் பெற்றுள்ளார்.

நடிகர் பார்த்திபன்
நடிகர் பார்த்திபன் எந்த சாதியையும், மதத்தையும் சாராதவர் என சோழிங்கநல்லூர் தாசில்தாரர் சான்றிதழ் கொடுத்துள்ளார்.
நடிகர் பார்த்திபன் ஜாதி, மதமற்றவர் என சான்று வழங்க வேண்டும் என்று கோரி இருந்தார். இந்த வழக்கை பரிசீலித்து சான்று வழங்க சோழிங்கநல்லூர் தாசில்தாரருக்கு உத்தரவிடக் கோரி நடிகர் பார்த்திபன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு மனு தாக்க ல் செய்திருந்தார்.

அந்த மனுவில், ஜாதி, மதம், மொழி அடிப்படையிலான பிளவுகள், தேச ஒற்றுமைக்கு பாதிப்பானது என்பதால், மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக திகழ, ஜாதி - மதமற்றவர் என சான்று அவர் கூறி இருந்தார்.
இந்த வழக்கை நீதிபதி எம்.தண்டபாணி விசாரித்தார். இதன் பின்னர் ஒரு வாரத்தில் நடிகர் பார்த்திபனுக்கு ஜாதி மதம் மற்ற சான்றிதழ் வழங்குமாறு சோழிங்கநல்லூர் தாசில்தாருக்கு உத்தரவும் இட்டார்.

இந்த உத்தரவின்படி நடிகர் பார்த்திபனுக்கு, ஜாதி, மதம் சாராதவர் என சோழிங்கநல்லூர் தாசில்தாரர், ஏப்ரல் 27-ம் தேதி சான்று வழங்கியுள்ளார். இது மறுபடியும் விசாரணைக்கு வரவுள்ளது.