கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் நடித்த பிரபலத்தின் மகள் இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா?
மணிரத்னம் இயக்கத்தில் வெளியான கன்னத்தில் முத்தமிட்டாய் திரைப்படத்தில் குழந்தையாக நடித்து பிரபல்யமான கீர்த்தனா இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா?
நடிகை கீர்த்தனா
2002ஆம் ஆண்டு மனிரத்னம் இயக்கத்தில் மாதவன், சிம்ரன், நந்திதா தாஸ் ,பிரகாஷ்ராஜ், பசுபதி போன்றோர் இணைந்து நடித்த கன்னத்தில் முத்தமிட்டாய் திரைப்படத்தில் குழந்தையாக நடித்து அறிமுகமானவர் தான் இவர் கீர்த்தனா.
இவர் பிரபல நடிகர் பார்த்தீபன் - சீதாவின் மகளாவார். இவர் நடித்த முதல் திரைப்படத்திலேயே பல பாராட்டுக்களும் விருதுகளும் குவிந்தது.
அதன் பின் இவர் வளர்ந்து வந்து நடிப்பில் கவனம் செலுத்துவார் என எதிர்பார்க்கப்பட்ட போது இயக்குனர் மணிரத்னத்திடம் உதவி இயக்குனராக பணியாற்ற சென்று விட்டார்.
அதன்பின் சினிமாவை விட்டு 2018ஆம் ஆண்டு அக்ஷய் என்பவரை திருமணம் செய்துக் கொண்டார். இந்நிலையில், நடிகை கீர்த்தனாவின் சில புகைப்படங்கள் இணையத்தில் அதிகம் வைரலாகி வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |