நடிகர் பாண்டியராஜின் மகன் இந்த நடிகரா? 18 வருடங்கள் கழித்து சினிமாவில் அங்கீகாரம்
நடிகர் பாண்டியராஜனின் மகன் பிரித்வி ராஜன், 18 ஆண்டுகளுக்கு பின்பு தனக்கு கிடைத்த அங்கீரகாரத்தை தந்தையுடன் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு பகிர்ந்துள்ளார்.
நடிகர் பாண்டியராஜன்
தமிழ் சினிமாவில் தனது நடிப்புத்திறமையினாலும், நகைச்சுவையினாலும் ரசிகர்களைக் கட்டிப் போட்டவர் தான் நடிகர் பாண்டிய ராஜன்.
இவருக்கு புதுமை கலை மன்னன் என்று ஒரு செல்ல பெயர் இருக்கும் நிலையில், 1986 ஆம் ஆண்டு வாசுகி என்பவரை திருமணம் செய்துள்ளார்.
இந்த வாசுகி யார் என்றால், அந்த காலத்தில் இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும், பாடல் ஆசிரியராகவும் இருந்த அவிநாசி மணியின் மகள் ஆவார்.
இந்த தம்பதியினருக்கு பல்லவர ராஜன், பிருத்வி ராஜன், பிரேம் ராஜன் என மூன்று மகன்கள் உள்ள நிலையில், இரண்டாவது மகன் பிரித்வி ராஜன் சினிமாவில் நடித்துள்ளார்.
கடந்த 2016ம் ஆண்டு தன்னுடைய அப்பா பாண்டியராஜன் இயக்கத்தில் வெளியான கைவந்த கலை என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார்.
மகன் பிரித்வி ராஜின் பதிவு
ஆனால் இதற்கு பின்பு சரியான வாய்ப்பு எதுவும் கிடைக்காமல் இருந்த பிரித்வி செலிப்ரிட்டி கிரிக்கெட் லீக்கில் விளையாடி வருகின்றார். தற்போது இவர் நடிப்பில் வெளியான ப்ளூ ஸ்டார் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
நடிகர் பிரித்வி ப்ளூ சட்டை படத்தின் படப்பிடிப்பின் போது தன்னுடைய தந்தை பாண்டியராஜனுடன் புகைப்படம் எடுத்துள்ளார். இந்த புகைப்படத்தினை வெளியிட்டு மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி இவன் தந்தை என் நோற்றான் கொல் எனும் சொல்' என்று பதிவிட்டுள்ளார்.
சுமார் 18 ஆண்டுகள் கழித்து தனக்கு கிடைத்த வாய்ப்பினை சரியாக பயன்படுத்தி, தனது தந்தைக்கு பெருமை சேர்த்துள்ளேன் என்று பிரித்வி உருக்கமாக கூறிய நிலையில், இவரின் பதிவை பார்த்த ரசிகர்கள் அதிகமாக வெற்றி பெற வேண்டும் என்று வாழ்த்து கூறி வருகின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |