வரலாற்று சாதனையாளராக மாறிய சிறுவன்.. எதற்காக இவ்வளவு பெரிய அங்கீகாரம்?
இங்கிலாந்தை சேர்ந்த 15 வயது சிறுவன் ஓவன் கூப்பருக்கு எம்மி விருது வழங்கப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் காணொளியுடன் செய்தி வெளியாகியுள்ளது.
தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் தொடர்களுக்கான 'எம்மி' விருது வழங்கி கௌரவிக்கும் விழா நடந்து முடிந்துள்ளது.
இந்த பிரமாண்ட விழா அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்றுள்ளது.
இந்த விழாவில் சிறந்த முன்னணி நடிகர், முன்னணி நடிகை, துணை நடிகைக்கான விருதை 'ஹேக்ஸ்' காமெடி தொடர் வென்றது. அந்த தொடரில் நடித்த சேத் ரோஜென் சிறந்த முன்னணி நடிகருக்கான விருதையும், ஜீன் ஸ்மார்ட் சிறந்த முன்னணி நடிகைக்கான விருதையும் பெற்றுக் கொண்டனர்.
15 வயதில் சாதனை படைத்த சிறுவன்
அதே போன்று, “அடோல்சென்ஸ்” என்ற இணையத் தொடரில் 15 வயதுடைய சிறுவன் ஓவன் கூப்பர் நடித்திருக்கிறார். இவர், சிறந்த துணை நடிகருக்கான எம்மி விருதை பெற்று வரலாற்று சாதனையாளராகவும் தற்போது மாறியிருக்கிறார்.
இங்கிலாந்தில் எடுக்கப்பட்ட இந்த தொடரை மையமாக வைத்து சிறந்த இயக்குநர், சிறந்த திரைக்கதை, சிறந்த துணை நடிகர், சிறந்த துணை நடிகை உட்பட ஆறு பிரிவுகளில் எம்மி விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
இவர்களில் 15 வயது சிறுவனான ஓவன் கூப்பர், சிறந்த துணை நடிகருக்கான விருது வென்றார். இளம் வயதில் எம்மி விருது பெற்றவர் என்ற பெருமையும் ஓவன் கூப்பரை சார்ந்துள்ளது.
இது குறித்து பேசிய ஓவன் கூப்பர், “ தனக்கு துணை நின்ற குடும்ப உறுப்பினர்கள் உட்பட அனைவருக்கும் நன்றி..” எனக் கூறியுள்ளார். மேடையில் இறங்குவதற்கு சில வினாடிகளுக்கு முன்னர் இந்திய முறைப்படி நமஸ்தே என்றும் கூறி சென்றுள்ளார்.
இந்த காணொளி இணையத்தில் வைரலாக்கப்பட்டு வருகிறது. அத்துடன் குறித்த சிறுவனுக்கு பலரும் வாழ்த்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
