உதவி இயக்குனரை தாக்கிய பிரபல சீரியல் நடிகர்! நிறுத்தப்பட்ட படப்பிடிப்பு
பிரபல சீரியல் நடிகர், துணை இயக்குனரை அடித்த சம்பவம் சீரியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நடிகர் நவீன்
கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் இதயத்தை திருடாதே என்ற தொடர் படு பிரபலமாக ஓடியது. 2 பாகங்கள் வெற்றிகரமாக ஓடியது, கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் முடிவடைந்தது.
இந்த தொடர் மூலம் தமிழக மக்களிடம் பிரபலமானவர் நடிகர் நவீன். இவருக்கும் செய்தி வாசிப்பாளர் கண்மணிக்கு அண்மையில் தான் திருமணம் முடிந்தது.

கண்ட நாள் முதல்
இபபோது நவீன் கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகும் கண்ட நாள் முதல் தொடரில் நாயகனாக நடித்து வருகிறார். அண்மையில் இந்த படப்பிடிப்பு தளத்தில் ஒரு பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
உணவு இடைவேளை முடிந்தும் ஷூட்டிங்கிற்கு வராமல் இருந்த நவீனை அழைத்து வர சென்ற போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் உண்டாகி கைக்கலப்பில் முடிந்துள்ளது. இதனால் படப்பிடிப்பும் நிறுத்தப்பட்டுள்ளது.
