கோமா நிலையிலும் விஜய்யை தேடிய நாசரின் மகன்.. உடனே ஓடி வந்து உதவிய தளபதி- நெகிழ்ந்த தருணம்
நடிகர் நாசர் தன்னுடைய மகன் கோமா நிலையில் இருந்த போதும் நடிகர் விஜயை மறக்கவில்லை என பேசியது ரசிகர்களின் கவனத்திற்கு சென்றுள்ளது.
இந்திய சினிமாவில் குணச்சித்திர நடிகர்களில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் நாசர்.
தமிழ், தெலுங்கு என ஆண்டிற்கு பல படங்களில் விதவிதமான கதாபாத்திரங்களில் நடித்து தன்னை சிறந்த நடிகராக நிரூபித்துக்கொண்டே இருப்பார்.
நடிகர் சூர்யாவின் ரெட்ரோ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
வாழ்வு கொடுத்த விஜய்
இந்த நிலையில், பேட்டியொன்றில் கலந்து கொண்டு அவருடைய மகன் மற்றும் விஜய் பற்றி பேசியிருக்கிறார்.
அதாவது, “என்னுடைய மகன் ஃபைசல் நடிகர் விஜய்யின் மிகத்தீவிரமான ரசிகன். எனக்கு மகனாக பிறந்து யாரோ ஒருவருக்கு ரசிகனாக இருக்கிறாயே எனக் கேட்பேன். “அந்தந்த வயதில் அப்படித்தான் இருப்போம்” என்பான். நடிகர் விஜய்யை அவன் சிலமுறை நேரில் சந்தித்திருக்கிறான். அவருக்கும் ஃபைசல் தன்னுடைய தீவிர ரசிகர் என்பதும் தெரியும்.
சுமாராக 14 நாட்கள் என்னுடைய மகன் சுயநினைவை இழந்து கோமா நிலையில் இருந்தான். அப்போது அவனுக்கு நாங்கள் சிங்கப்பூரில் சிகிச்சை கொடுத்தோம். பின்னர் மெல்ல மெல்ல நினைவு திரும்பியது, அப்போது அவன் அப்பா, அம்மா என யாரையும் கூப்பிடவில்லை. அவன் கூறிய பெயர் விஜய்தான்.
தமிழக வெற்றிக் கழகத்தில் உறுப்பினராகினாரா?
விஜய் என்று அவனுக்கு ஒரு நண்பரும் இருக்கிறார். உடனே அவரை அழைத்து வந்து காட்டினோம். எந்தவித அசைவும் இல்லாத காரணத்தினால் நடிகர் விஜய்யின் புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் காட்டினோம்.
அதன் பின்னரே நினைவு வந்தது. இந்த செய்தியை அறிந்த விஜயையும் பல முறை வீட்டிற்கு வந்து மகனுடன் விளையாடி செல்வார். இப்போது சிறிய முன்னேற்றங்கள் இருந்தாலும் பல விஷயங்களை அவன் மறந்துவிடுவான். ஆனால், விஜய்யின் பெயரைச் சொன்னால் சில நினைவுகள் வந்துவிடும்.
விஜய் கட்சி ஆரம்பித்தது தெரிந்ததும் அவனுடைய நண்பர்களிடம் சொல்லி, தமிழக வெற்றிக் கழகத்தில் உறுப்பினராகிவிட்டான். என் மகன் வாழ்வில் நடிகர் விஜய்க்கு பெரிய இடம் இருக்கிறது.” என கூறியுள்ளார்.
இந்த செய்தி விஜய் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |