விபத்தில் சிக்கிய நடிகர் நாசரின் தற்போதைய நிலை என்ன தெரியுமா? திரையுலகில் பரபரப்பு
படப்பிடிப்பில் திடீர் என விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நாசரின் தற்போதைய நிலை குறித்து அவரின் மனைவி தகவல் வெளியிட்டுள்ளார்.
நடிகர் நாசர் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என தென்னிந்திய சினிமாவில் மிக பிரபலமான நடிகர்.
தற்போது இரண்டாவது முறையாக நடிகர் சங்க தேர்தலில் வெற்றி பெற்று தலைவராக பொறுப்பு வகித்து வருகிறார்.
சினிமாவில் பிசியாக நடித்து கொண்டிருக்கும், நாசர் ஹைதராபாத்தில் நடந்து கொண்டிருக்கும் படப்பிடிப்பில் நடித்து கொண்டிருந்த போது, விபத்தில் சிக்கியுள்ளார்.

நாசரின் தற்போதைய நிலை
இதையடுத்து உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்று படக்குழுவினர் சிகிச்சையளித்து வரும் நிலையில், தற்போது இவரது உடல்நிலை நலமாக உள்ளதாக அவரது மனைவி கமீலா நாசர் தெரிவித்துள்ளார்.