15 நாள் கப்பல் பயணம்.. ஒரு வழியாக ஜப்பான் சேர்ந்த மாப்பிள்ளை- திருமணம் எப்போது?
நடிகர் நெப்போலியனின் குடும்பம் 15 நாட்கள் கப்பல் பயணத்தை முடித்து ஜப்பான வந்து சேர்ந்துள்ளனர்.
நெப்போலியன் குடும்பம்
தமிழ் சினிமாவில் வில்லனாக அறிமுகமாகி பின்னர் கதாநாயகனாக கலக்கியவர் தான் நடிகர் நெப்போலியன்.
சினிமாவில் டாப்பில் இருந்த காலப்பகுதியில் அரசியலிலும் ஈடுபாடு காட்டி வந்தார்.
நடிகர் நெப்போலியன் ஜெயசுதா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு தனுஷ் மற்றும் குணால் என்ற இரண்டு மகன்கள் இருக்கின்றனர்.
இவர்களில் நெப்போலியனின் மூத்த மகன்- தனுஷ் உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறார்.
இவருக்கு திருநெல்வேலியில் பெண் பார்த்து முடிவு செய்து தற்போது திருமணத்தை நெப்போலியன் ஜப்பானில் வைத்திருக்கிறார். இந்த திருமணத்தில் பல பிரபலங்கள் கலந்துக் கொண்டிருக்கிறார்.
15 நாட்கள் பயணம்
இந்த நிலையில், தற்போது நெப்போலியனின் குடும்பத்துடன் 15 நாட்கள் பயணம் செய்து ஜப்பான் வந்து சேர்ந்துள்ளனர்.
குஷிரோ துறைமுகத்தில் நெப்போலியனை குடும்பத்தை பூங்கொத்து கொடுத்து அங்கிருந்தவர்கள் வரவேற்றுள்ளனர்.
தனுஷின் திருமணத்திற்கு இன்னும் ஒன்றரை மாதம் இருக்கும் நிலையில், திருமண வேலைகளை நெப்போலியன் குடும்பமாக சேர்ந்து பார்த்து வருகிறார்.
“ அம்பானி மகனின் திருமணத்தை பார்த்து இந்த உலகமே வியந்து போனது போல் அவருக்கே டஃப் கொடுத்து நெப்போலியன் திருமணம் செய்வார் போலயே..” இணையவாசிகள் கருத்துக்கள் பதிவு செய்து வருகின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |