நெப்போலியன் மகனுக்கு ஜப்பானில் திருமணம்- இர்பானுக்கு அழைப்பிதழுடன் வந்த Gift
நெப்போலியன் மகனின் திருமணம் வேலைகள் ஆரம்பித்து விட்டதாக சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியாகியுள்ளது.
நெப்போலியன் மகன் திருமணம்
தமிழ் சினிமாவில் மாஸ் வில்லனாகவும், ஹீரோவாகவும் தனது நடிப்பின் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் தான் நடிகர் நெப்போலியன்.
இவரின் மூத்த மகன் தனுஷ் திருமணத்தை தடபுடலாக நடந்து கொண்டிருக்கின்றது.
அதற்காக பத்திரிக்கை கொடுக்கும் வேலையில் பிஸியாக இருக்கும் நெப்போலியன் பத்திரிகை கொடுக்கும் வேலையை ஆரம்பித்துள்ளார்.
யூடியூபர் இர்பானுக்கு அழைப்பு
அந்த வகையில், நடிகர் நெப்போலியன் யூடியூபர் இர்பான் வீட்டுக்கு நேரில் சென்று அழைப்பிதழ் கொடுத்துள்ளார்.
இந்த வீடியோவை இர்பான் தனது யூடியூப் சேனலில் பதிவிட்டுள்ளார்.
அதில், நெப்போலியன் மகனுக்கு ஜப்பான் தலைநகர் டோக்கியோ திருமணம் நடைபெறவிருப்பதாக தெரிவித்துள்ளார்.
அழைப்பிதழுடன் வந்த பரிசுப்பொருட்கள்
மேலும், நெப்போலியன் மகனின் திருமண அழைப்பிதழ் மன்னர் காலத்து ஓலைச்சுவடி போன்று தங்க நிறத்தால் ஜொலி ஜொலிப்பதாகவும் வெள்ளிக்கின்னம் ஒன்றும், முத்திரி, பாதம், பிஸ்தா அடங்கிய பாக்ஸ் ஒன்றையும் பரிசாக கொடுத்தாகவும் அவர் கூறியுள்ளார்.
திருமணம் எங்கு நடக்கப்போகிறது என்று பலவிதமான செய்திகள் வெளியாகி வந்த நிலையில் இந்த அழைப்பிதழ் அனைத்திற்கு முற்று வைத்துள்ளது.
தனுஷ் -அக்ஷயா திருமணம் ஜப்பானில் நடப்பது உறுதியாகியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |