தேவதையாக ஜொலிக்கும் நதியா... முதல் முறை வெளிநாட்டுக்கு படப்பிடிப்பு சென்றது எந்த படத்தில் தெரியுமா?
80களின் தொடக்கங்களில் சினிமா ரசிகர்களை தன் இயல்பான நடிப்பால் தன் பக்கம் ஈர்த்தவர் நடிகை நதியா.
திரைப்படங்களில் கவனம் செலுத்தி வந்த நதியா ஒரு கட்டத்தில் திருமணம் செய்து கொண்டு அமெரிக்காவிற்கு சென்று விட்டார்.
அவருடைய அமெரிக்கா பயணம் ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றமாக இருந்தது. 90களின் தொடக்கத்தில் மீண்டும் இந்தியா வந்த நதியா தென்னிந்திய படங்களில் முக்கிய கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடிந்து வந்தார்.
இந்நிலையில், கடந்த 34 ஆண்டுகளுக்கு முன்பு விஜயகாந்த் உடன் தான் "பூமழை பொழியுது", திரைப்படத்தில் நடித்தபோது எடுத்துக்கொண்ட ஒரு புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு தன் அனுபவங்களை பகிர்ந்துள்ளார்.
அதில், "விஜயகாந்துடன் நான் நடித்த முதல் படம் "பூமழை பொழியுது". அழகப்பன் இயக்கிய இந்த படத்திற்கு ஆர்.டி.பர்மன் இசையமைத்தார். இந்த படத்தில் தான் முதன்முதலாக வெளிநாட்டிற்கு சென்று படப்பிடிப்பில் கலந்து கொண்டேன். ஜப்பான், ஹாங்காங் நாடுகளில் படப்பிடிப்பு நடைபெற்றது" என்று பதிவிட்டுள்ளார் நதியா. இவருடைய பதிவு தற்போது அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.
