காமெடி நடிகர் மகன் +2 தேர்வின் மதிப்பு எவ்வளவு தெரியுமா? பரிசு கொடுத்து வாழ்த்திய தருணம்
காமெடி நடிகர் முத்துக்காளை மகன் +2 தேர்வில் பெற்ற மதிப்பு பற்றிய விவரங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
நடிகர் முத்துக்காளை
ஒரு சிலர் பல்வேறு திறமைகளை தங்களுக்குள் வைத்திருப்பார்கள். அவர்களை பார்க்கும் பொழுது இவ்வளவு திறமை உள்ளதா என வியக்க வைக்கும். அப்படியொருவர் தான் நடிகர் முத்துக்காளை.
தமிழ் சினிமாவில் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்து பிரபலமானவர் தான் முத்துக்காளை.
இவர், நடிகராக மட்டுமல்லாமல் சண்டை மாஸ்டராகவும் இருக்கிறார். விருதுநகர் மாவட்டத்தில் பிறந்த முத்துக்காளை “காதலன்” திரைப்படத்தின் மூலமாக தான் சினிமாவில் அறிமுகமானார்.
இதனை தொடர்ந்து, பொன் மனம், என் உயிர் நீதானே, தவசி, யூத், ஆல்பம், அன்பே சிவம், மொழி, சிவாஜி, சந்திரமுகி 2 உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார்.
நடிகர் வடிவேலுவுடன் இணைந்து ஏராளமான படங்களில் நம்மை சிரிக்க வைத்திருக்கிறார்.
பரீட்சை மதிப்பெண்கள் எவ்வளவு?
இந்த நிலையில், மது பழக்கத்திற்கு அடிமையாக இருந்த முத்துகாளை மெது மெதுவாக அந்த பழக்கத்தில் இருந்து வெளியில் வந்து குடும்பம், குழந்தை என வாழ்ந்து வருகிறார்.
இதன்படி, முத்துக்காளையின் மகன் அப்பாவிற்கு பெருமை சேர்க்கும் வகையில், 12 ஆம் வகுப்பு தேர்வில் 438 மதிப்பெண்கள் எடுத்து வெற்றி பெற்று இருக்கிறார்.
இதனை அறிந்த முத்துக்காளை தன்னுடைய மகனுக்கு பிடித்த பால்கோவாவை பரிசாக வாங்கி கொடுத்திருக்கிறார். இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
இதனை பார்த்த ரசிகர்கள் மகனுக்கு வாழ்த்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
