நடிகர் மோகன் ஷர்மாவின் காரை வழிமறித்து தாக்குதல்... பலத்த காயங்களுடன் சிகிச்சை
சின்னத்திரை நடிகரான மோகன் ஷர்மா மீது இனந்தெரியாதோர் சிலர் தாக்குதல் நடத்திய சம்பவம் தற்போது வைரலாகி வருகின்றது.
நடிகர் மோகன் ஷர்மா
நடிகர் மற்றும் தயாரிப்பாளர், எழுத்தாளர் என பன்முகத்திறன் கொண்டவர் மோகன் ஷர்மா. இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் போன்ற திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.
இவர் தமிழில் கண்ணெதிரே தோன்றினாள், உயிரோடு உயிராக, சுயம்வரம், ப்ரெண்ட்ஸ், அப்பு, தோஸ்த், ஏய் நீ ரொம்ப அழகா இருக்க, சச்சின், பார்த்திபன் கனவு, தவம், ராஜ்ஜியம் என பலத்திரைப்படங்களில் நடித்திருக்கிறார். அதுமட்டுமல்லாது பல தமிழ் சீரியல்களிலும் நடித்திருக்கிறார்.
தாக்குதல்
நடிகர் மோகன் ஷர்மா தன் குடும்பத்துடன் சேத்துப்பட்டில் உள்ள ஹாரிங்டன் சாலையில் வசித்து வந்திருக்கிறார். இந்நிலையில் அவர் தன் வீட்டிற்குக் சென்றுக் கொண்டிருந்த வேளையில் இனந்தெரியாதோர் சிலர் அவரின் காரை வழி மறித்து அவரை தாக்கி தள்ளி விட்டு சென்றிருக்கிறார்கள்.
75 வயதான மோகன் ஷர்மா அவர்களின் தாக்குதலுக்கு இலக்காகி பலத்த காயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும், இவரைத் தாக்கியதற்கு முன்விரோத பிரச்சினைகள் தான் காரணம் என தெரிவிக்கப்பட்டு வருகிறது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |