நா ரெடி பாடலால் சர்ச்சையில் சிக்கிய மன்சூர் அலிகான்... 61 வயதில் இது தேவையா?
விஜய் நடிப்பில் உருவாகிய லியோ படத்தின் நான் ரெடி பாடலுக்கு மன்சூர் அலிகான் கொடுத்துள்ள வைப் நெட்டிசன்களை கொந்தளிக்க வைத்துள்ளது.
விஜய்யின் லியோ
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ திரைப்படம் உருவாகி வரும் நிலையில், இப்படத்தில் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.
இப்படத்திலிருந்து விஜய், அனிருத் மற்றும் அசல் கோளாறு ஆகிய மூவரும் பாடிய நான் ரெடி என்ற பாடல் சில தினங்களுக்கு முன்பு வெளியாகி நல்ல வரவேற்பினைப் பெற்று வருகின்றது.
சில சர்ச்சைகளையும் கிளப்பி வரும் நிலையில், இது அடங்குவதற்குள் மன்சூர் அலிகான் இப்பாடல் மூலம் மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்திள்ளது.
தனது காரில் பயணித்து செல்லும் அவர் சீட் பெல்ட் அணியாமல் இப்பாடலுக்கு வைப் கொடுத்துள்ள காணொளி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
விஜய் ரசிகர்கள் இது குஷியை ஏற்படுத்தியிருந்தாலும், 61 வயது நிரம்பிய ஒரு மூத்த நடிகருக்கு சீட் பெல்ட் அணியாமல், இப்படியொரு நடனம் தேவையா என நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகின்றனர்.
Mansoor Ali Khan Vibing #NaaReady ? #Leo @actorvijay pic.twitter.com/3uANDuhDKV
— ????? ??? ??????ⱽᵀᴹ (@VTMOffl) June 28, 2023
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |