தற்கொலை செய்து கொள்வதாக மைக் மோகனை மிரட்டிய மனோபாலா! மறைந்த பின்பு வெளியான ரகசியம்
நடிகர் மனோபாலா தான் தற்கொலை செய்து கொள்வதாக மைக் மோகனிடம் மிரட்டியுள்ள சம்பவம் தற்போது வெளியாகியுள்ளது.
நடிகர் மோகன்
தமிழ் சினிமாவைப் பொறுத்தவரையில் ஒருவரது வாய்ப்பை தட்டிப் பறிக்கவே பலரும் நினைப்பார்கள். அதில் நடிப்பு மற்றும் இயக்குனர் இந்த இரண்டு விஷயத்திற்குத் தான் பலரும் போட்டி போடுவார்கள்.
மறைந்த நடிகர் மனோ பாலா குறித்த சில தகவல்களை நடிகர் மோகன் கூறியுள்ள நிலையில், ரசிகர்கள் பலரும் ஆச்சரியமடைந்துள்ளனர்.
நடிகர் மனோ பாலா பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராக இருந்தார். இவர் இயக்கிய முதல் திரைப்படம் ‘ஆகாய கங்கை’.
இப்படத்தில் கார்த்திக், சுஹாசினி நடித்திருந்த நிலையில், இப்படம் தோல்வியடைந்தது. பின்பு மனோ பாலாவிற்கு அவ்வளவாக வாய்ப்புகள் எதுவும் கிடைக்காமல் இருந்துள்ளார்.
இந்நிலையில் நடிகர் மைக் மோகன் மனோ பாலா பற்றி கூறுகையில், இருவரும் வாடா போடா என்று பேசும் அளவிற்கு நல்ல நண்பர்கள். அவரது முதல்படம் தோல்வியடைந்ததால் வாய்ப்பு கிடைக்காமல் இருந்தார்.
அடிக்கடி தன்னைப் பார்த்து கால்ஷீட் கேட்டுக்கொண்டிருந்தவன், ஒரு நாள் வந்து நீ எனக்கு கால்ஷீட் கொடுக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள்வேன் என்று புலம்பியுள்ளார்.
ஒருநாள் மட்டும் டைம் கொடு என்று அனுப்பி வைத்தேன். அத்தருணத்தில் கால்ஷீட் கேட்டு கலைமணி வந்த போது, மனோபாலா தான் இயக்குனர்... இதற்கு நீங்கள் ஒப்புக்கொண்டால் கால்ஷீட் தருகிறேன் என்று கூறியுள்ளார்.
அடுத்தநாள் அயன் செய்த சட்டையுடன் சிரித்த முகத்தோடு மனோபாலா நின்று கொண்டிருந்தான். அப்படி உருவான படம்தான் பிள்ளை நிலா’ என மோகன் பகிர்ந்து கொண்டுள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |