பிரபல கொமடி நடிகர் மருத்துவமனையில் அனுமதி! வைரலாகும் புகைப்படம்
பிரபல கொமடி நடிகரும், இயக்குனர் என பன்முக திறமை கொண்ட நடிகர் மனோ பாலாவின் உடல்நிலையில் பிரசச்சினை ஏற்பட்டுள்ளதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பன்முக திறமையுடைய மனோ பாலா
தமிழ் சினிமாவில், துணை இயக்குனராக இருந்து, பல முன்னணி இயக்குனர்களுடன் பணியாற்றி இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும், கொமடி நடிகராகவும் கலக்குபவர் தான் நடிகர் மனோ பாலா.
சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரையும் தன்னுடைய நடிப்பால் கட்டிப்போட்ட நடிகர் பாலா தற்போது உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
உடல்நலக் குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, ஆஞ்சியோ சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தற்போது சிகிச்சை முடிந்து மருத்துவர்கள் மேற்பார்வையில் இருக்கும் நிலையில், இவரது புகைப்படம் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.