12 வயதில் இப்படியொரு பக்குவமா? முதல் சம்பளம் 1 கோடியை தானமாக கொடுத்த பிரபல நடிகரின் மகள்
பிரபல தெலுங்கு நடிகர் மகேஷ் பாபுவின் மகள், தான் வாங்கிய முதல் சம்பளமான 1 கோடியை தொண்டு நிறுவனத்திற்கு கொடுத்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளார்.
நடிகர் மகேஷ் பாபு
தெலுங்கு நடிகரான மகேஷ் பாபு ஏகப்பட்ட ரசிகர் பட்டாளத்தை பெற்றுள்ளார்.இவர் தெலுங்கு நடிகர் மற்றும் அரசியல்வாதியான கட்டமனேனி கிருஷ்ணாவின் மகன் ஆவார்.
குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த இவர் தற்போது தெலுங்கு திரையுலகில் வசூலில் அள்ளிக் குவிக்கும் ஹீரோவாக இருக்கின்றார்.
மகேஷ் பாபு, நடிகை நம்ரதாவை 2005ம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட நிலையில், இந்த தம்பதிகளுக்குகௌதம் கட்டமனேனி என்கிற மகன் மற்றும் சித்தாரா கட்டமனேனி என்கிற மகள் ஒருவரும் உள்ளனர்.
தற்போது 12 வயதாகும் சித்தாரா சிறுவயதிலிருந்தே மாடலிங் துறையில் கலக்கி வருகின்றார். இவருக்கு சமூக வலைத்தளங்களில் ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளம் உள்ளனர்.
தானமாக கொடுக்கப்பட்ட சம்பளம்
சமீபத்தில் பிரபல நகை கடை நிறுவனத்தின் விளம்பரத்தில் நடித்த சித்தாரா, இதற்கு 1 கோடி ரூபாய் முதல் சம்பளமாக பெற்றுள்ளார். இதனை சற்றும் யோசிக்காமல் தொண்டு நிறுவனம் ஒன்றிற்கு நன்கொடையாக கொடுத்து வாயடைக்க வைத்துள்ளார்.
வெறும் 12 வயதில் இப்படியொரு பக்குவமா? என்ற கேள்வியுடன் ரசிகர்கள் இவரை பாராட்டி வருகின்றார். சித்தாரா தற்போது ஹைத்ராபாத்தில் உள்ள CHIREC இன்டர்நேஷனல் பள்ளியில் 7-ஆம் வகுப்பு படித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |