இந்த பையன் வேண்டாம்ப்பா- மாதவனை நிராகரித்த மணிரத்னம்
கண்ணைப் பார்த்து நடிகர் மாதவனை இயக்குநர் மணிரத்னம் நிராகரித்த தகவல் தற்போது வெளியாகி ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் மாதவன்
தமிழ் சினிமாவில் சாக்லேட் பாய் நடிகராக வலம் வந்தவர் நடிகர் மாதவன். இவர் முதன்முதலாக தமிழில் ‘அலைபாயுதே’ படத்தின் மூலம் அறிமுகமானார்.
முதல் படமே சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தால், அடுத்தடுத்து இவருக்கு படங்களில் நடிக்க வாய்ப்பு வீட்டு கதவைத் தட்டியது. இதனையடுத்து, ‘ரன்’, ‘மின்னலே’, ‘ப்ரியமான தோழி’, ‘ஜே ஜே’ உட்பட பல படங்களில் நடித்துள்ளார். தமிழ் மட்டுமல்லாமல், இந்தி, தெலுங்கு உட்பட பல மொழிகளில் நடித்துள்ளார்.
மாதவனை நிராகரித்த மணிரத்னம்
இந்நிலையில், முதன்முதலாக இயக்குநர் மணிரத்னம் மாதவன் கண்ணைப் பார்த்து நிராகரித்த தகவல் தற்போது சமூகவலைத்தளங்களில் வெளியாகி ரசிகர்களிடையே ஷாக்கை ஏற்படுத்தியுள்ளது.
முதன் முதலாக படவுர் விளம்பரத்தில் நடிகர் மாதவன் நடித்துக்கொண்டிருந்தார். அதன் பிறகு, மும்பைக்குச் சென்ற மாதவன் டிவி சீரியல்களில் நடிக்கத் தொடங்கினார்.
இதன் பிறகு சந்தோஷ் சிவன் என்பவர் இயக்குநர் மணிரத்னத்திடம் மாதவனை அறிமுகப்படுத்தினார். அப்போது, ‘இருவர்’ படத்தில் தமிழ்செல்வன் கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக ஆடிஷனில் நடிகர் மாதவன் கலந்துகொண்டாராம்.
மாதவனின் கண்ணைப் பார்த்த மணிரத்னம் இல்லைப்பா.. இந்த பையன் இந்த படத்திற்கு செட் ஆகமாட்டாரு. அவருடைய கண் ரொம்ப இளமையாக இருக்கிறது. இந்த கதாபாத்திரத்திற்கு சீனியர் நடிகர்தான் வேண்டும் என்று கூறிவிட்டாராம்.
ஆனால் மணிரத்னத்திற்கு மாதவனின் சிரிப்பும், வசீகர கண்ணும் பிடித்திருந்தது. இதனையடுத்து, மணிரத்னம் இயக்கிய ‘அலைபாயுதே’ படத்தில் மாதவனை நடிக்க வைத்தாராம்.