நடிகர் மதன் பாபு காலமானார்! 5 மணியளவில் வீட்டில் நடந்தது என்ன?
பிரபல நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகர் மதன் பாப் என்ற மதன் பாபு இன்று காலாமானார். அவருடைய வீட்டில் 5 மணியளவில் என்ன நடந்தது என்பதை பதிவில் பார்க்கலாம்.
நடிகர் மதன் பாப்
தமிழ் சினிமாவில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து புகழ்பெற்றவர் தான் நடிகர் மதன் பாப்.
இவர், நடிகர் விஜய்யின் பூவே உனக்காக, ப்ரண்ட்ஸ், கண்ணுக்குள் நிலவு, யூத், நடிகர் அஜித் குமாரின் வில்லன், கமல்ஹாசனின் பம்மல் கே சம்மந்தம், வசூல் ராஜா எம்பிபிஎஸ் உள்பட 100 திரைப்படங்களில் நடித்துள்ளார்.
தனது வித்தியாசமான சிரிப்பால் மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்த இவர், சினிமா நடிகர் மட்டுமின்றி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கெடுத்து வந்தார்.
நிகழ்ச்சி தொகுப்பாளர், நிகழ்ச்சி நடுவர் உள்ளிட்ட பணிகளையும் செய்தார்.
மதன் பாபு காலமானார்
இந்த நிலையில், நடிகர் மதன் பாபுவுக்கு தற்போது 71 வயது ஆகிறது. சென்னை அடையாறு இல்லத்தில் மதன் பாபு வசித்து வந்தார்.
இன்றைய தினம் அவரது வீட்டில் உடல் நலக்குறைவு காரணமாக காலமாகியுள்ளார்.
இருப்பினும் அவர் எந்த மாதிரியான உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு இருந்தார் என்ற தகவல் வெளியாகவில்லை. ஆனால் அவருக்கு புற்றுநோய் இருப்பதாகவும் சில தகவல் வெளியாகியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |