தந்தையிடம் சரமாரியாக சண்டையிட்ட கொட்டாச்சி மகள்... வைரல் காணொளி
நடிகர் கொட்டாச்சியின் மகள் சாப்பிடுவதற்கு மலேசியா அழைத்துச் செல்ல தனது தந்தையிடம் சண்டையிடும் காட்சியை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
நடிகர் கொட்டாச்சி
தமிழ் சினிமாவில் விஜய் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் சிறு சிறு காமெடி ரோல்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் கொட்டாச்சி.
பின் பட வாய்ப்பு குறைந்ததால் திரையுலகை விட்டு சற்று ஒதுங்கிய இவருக்கு, அவ்வப்போது கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி வருகின்றார்.
ஆனால் இவருக்கு கிடைக்காத வரவேற்பு இவரின் மகளுக்கு கிடைத்துள்ளது. ஆம் 6 வயதில் இவரது மகள் மானஸ்வி இமைக்கா நொடிகள் படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.
பின்பு சில படங்களில் நடித்த மானஸ்வி விளம்பரங்களிலும் நடித்து வருகின்றார். மகளால் கொட்டாச்சி சொந்த வீடு வாங்கி அதில் குடியேறினார். தற்போது மலேசியாவில் உள்ள காரம் சாரம் என்ற உணவக விளம்பரத்திற்காக தனது தந்தை கொட்டாச்சியுடன் சண்டையிடும் காட்சி வைரலாகி உள்ளது.
இக்காட்சியினை கொட்டாச்சி வெளியிட்டதுடன், தனது மகள் நிஜத்தில் மிகவும் மரியாதை கொடுப்பவர்... இது ஒரு விளம்பர படத்திற்காக நாங்கள் இருவரும் செய்யும் நடிப்பு என்று கூறியுள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |