பசங்க பட நடிகர் கிஷோர் அப்பாவாக போறாரா? வாழ்த்துக்களை குவிக்கும் ரசிகர்கள்
பசங்க பட நடிகர் கிஷோர் மற்றும் சீரியல் நடிகை ப்ரீத்தி குமார் தம்பதிகளுக்கு விரைவில் குழந்தை பிறக்க இருப்பாத வெளியாகியுள்ள தகவல் தற்போது இணையத்ததை ஆக்கிரமித்து வருகின்றது.
பசங்க திரைப்படம்
நடிகர் சசிகுமாரின் தயாரிப்பில் உருவான படம் தான் பசங்க. இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவான இந்த படம் அவருக்கு முதல் படம்.
இத்திரைப்படத்தில் விமல், வேகா மற்றும் முக்கிய கதாப்பாத்திரங்களில் சிறுவர்கள் பலர் நடித்துள்ளார். பசங்க படத்தில் வரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து புகழ் பெற்றவர் தான் கிஷோர்.
பசங்க, கோலி சோடா என இவரது ஆரம்பகால திரை வாழ்க்கை, அதில் அடுத்ததடுத்த வெற்றி என, மக்கள் மனதில் நல்ல அடையாளத்தை கொடுத்தது.
கிஷோர் - ப்ரீத்தி குமார்
அவர் சன் தொலைக்காட்சியில் ஒளிபரபடபான வானத்தை போல சீரியல் புகழ் நடிகை ப்ரீத்தி குமாரை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார்.
கிஷோரை விட ப்ரீத்தி குமாருக்கு 4 வயது அதிகம் என்பதால் சமூக வலைதளங்களில் இவர்களின் திருமணம் குறித்து அதிகமாக பேசப்பட்டது.
அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இருவரும் இன்று வரையில் மகிழ்சியாக வாழ்ந்து வருகின்றனர்.
திருமணம் முடிந்து ஒன்றரை வருடம் ஆகும் நிலையில் தற்போது ப்ரீத்தி கர்ப்பமாக இருக்கிறாரார் என்ற தகவல் இணையத்தில் லைரலாகி வருகின்றது.
இந்த தம்பதியினர் குழந்தையை எதிர்பார்த்து காத்திருப்பதாக அவர்கள் கூறி இருக்கின்றனர். அதனால் அவர்களுக்கு ரசிகர்கள் இணையத்தில் வாழ்த்துக்கனை குவித்து வருகின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |