கிங்காங் வீட்டு திருமணம்... வராத வடிவேலு வைத்த மொய் எவ்வளவு தெரியுமா?
நடிகர் கிங்காங் வீட்டு திருமணத்திற்கு வருகை தராத நடிகர் வடிவேலு அன்பளிப்பாக கொடுத்த பணம் குறித்த தகவலை கிங்காய் சங்கர் கூறியுள்ளார்.
நடிகர் கிங்காங்
தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக வலம் வரும் கிங்காங் சங்கர் தனது மகளின் திருமணத்தை சமீபத்தில் நடத்தி முடித்தார்.
சமீபத்தில் மிகவும் ட்ரெண்டாக திருமணம் என்றால் கிங்காங் வீட்டு திருமணம் தான். இவர் சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என அனைவருக்கும் நேரில் சென்று பத்திரிக்கை வைத்தார்.
இந்த திருமணத்திற்கு முதலமைச்சர் ஸ்டாலின், அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், விசிக தலைவரான திருமாவளவன் உட்பட பலரும் வருகை தந்தனர்.
இந்நிலையில், நடிகர் வடிவேலுவால் திருமணத்தில் கலந்து கொள்ள முடியவில்லை என்றாலும், அவரது செயல் குறித்து நெகிழ்ச்சியுடன் நடிகர் 'கிங்காங்' சங்கர் தெரிவித்துள்ளார்.
வடிவேலு கொடுத்த அன்பளிப்பு
நேரில் வரமுடியாத வடிவேலு தொலைபேசி வாயிலாக வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் இந்த திருமணத்திற்கு முதலமைச்சர் கலந்து கொண்டது மிகப்பெரிய விடயமாக பார்க்கப்படுகின்றது.
முதலமைச்சர் வந்ததன் மூலம் தமிழ்நாட்டில் 8 கோடி மக்களும் திருமணத்திற்கு வந்ததாக நினைத்துக் கொள்வதாக கூறினார்.
திருமணம் சிறப்பாக நடைபெற்றதற்கு தனது உழைப்பு தான் காரணம் என்றும், வடிவேலு வரமுடியாத காரணத்தினால் வேறு பிரபலத்திடம் ரூ. 1 லட்சத்தை வடிவேலு கொடுத்து அனுப்பியிருந்ததாக கூறியுள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |