இந்த சிறுவன் யார்னு தெரியுதா? தமிழ் சினிமாவின் பிரபல நடிகர்தான் இந்த சிறுவன்
தமிழ் சினிமாவில், முன்னணி நடிகர்களாக நடித்து வரும், பல பிரபலங்களின் பழைய புகைப்படங்களை அவ்வப்போது இணையத்தில் வைரலாவரு வழக்கம்.
அந்த வகையில், தற்போது இந்த விஜய் பட நடிகரின் சிறுவயது புகைப்படம் தற்போது இணையத்தில் ரசிகர்களால் அதிகமாக பகிரப்பட்டு வருகின்றது.
சினிமாவில் மாத்திரமன்றி இந்த நடிகர் இணைய தொடர்கள் மூலமாகவும் ரசிகர்களின் வரவேற்பை பெற்று வருகிறார்.
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் பிரபல இளம் நடிகர் கதிர்தான் இந்த புகைப்படத்தில் இருக்கும் சிறுவன்.
நடிகர் கதிர்
மத யானை கூட்டம் என்ற படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகர் தான் கதிர்.
இதனை தொடர்ந்து விக்ரம் வேதா படத்தில் வில்லன் விஜய் சேதுபதிக்கு தம்பியாக நடித்து ரசிகர்களின் வரவேற்பை பெற்றார்.
மாரி செல்வராஜ் இயக்கிய பரியேறும் பெருமாள் திரைப்படம் கதிருக்கு மிகப்பெரும் திருப்புமுனையாக அமைந்தது.
அதன் பின்னர் இவர் விஜய் நடிப்பில் வெளியான பிகில் திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார்.
பரியேறும் பெருமாள் படத்திற்காக நடிகர் கதிர் SIIMA விருது பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.
கதிர் நடிப்பில் வெளிவந்த சுழல் என்ற இணைய தொடரும் ரசிகர்களின் ஆதரவை பெற்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |