வீல் சேரில் வந்த நவரச நாயகன்.. உடல்நிலை இப்போ எப்படி இருக்கு?
நவரச நாயகன் என மக்களால கொண்டாடப்பட்ட நடிகர் கார்த்திக் வீல் சேரில் வந்த புகைப்படம் ரசிகர்களை பதற வைத்த நிலையில், அவரின் உடல்நலம் தற்போது எப்படி இருக்கிறது என்ற விவரங்கள் வெளியாகியுள்ளது.
நடிகர் கார்த்திக்
பழம்பெரும் நடிகர் முத்துராமனின் மகன் தான் நடிகர் கார்த்திக்.
இவர், பாரதிராஜா இயக்கத்தில் வெளியாகிய, கண்களில் பட அலைகள் ஓய்வதில்லை..” என்ற படத்தின் மூலம் நாயகராக அறிமுகமானார். அவருடன் நடிகர் ராதாவும் நாயகியாக அதே திரைப்படத்தில் அறிமுகமானார்.
இதனை தொடர்ந்து கார்த்திக்கின் யதார்த்தமான நடிப்பு, அழகு, திறமை ஆகிய திரைத்திறையில் கொடிக்கட்டி பறக்கும் நடிகராக மாற்றியது. அன்று முதல் இன்று வரை கார்த்திக்கின் நடிப்பை ஈடு செய்வதற்கு தமிழ் சினிமாவில் வேறு ஒரு நடிகர் வரவில்லை.

என்ன தான் இவர் நடிப்பில் புலியாக இருந்தாலும், திரைத்துறையில் இருப்பவர்களுடன் ஏற்பட வாக்குவாதங்கள் காரணமாக படவாய்ப்புகள் குறைய ஆரம்பித்து கார்த்திக்கின் மார்க்கட் படிபடியாக குறைய ஆரம்பித்தது.
இதற்கிடையில், அனேகன் திரைப்படத்தில் ரீ- என்றி கொடுத்து மாஸ் காட்டியிருப்பார்.
தற்போது எப்படி இருக்கிறார்?
இந்த நிலையில், நடிகர் கார்த்திக் உடல்நலம் சரியில்லாமல் இருக்கிறார்கள் என பல செய்திகள் வந்திருந்தாலும், அதனை உறுதிப்படுத்தும் வகையில் வீல் சேரில் உள்ள புகைப்படம் சமீபக்காலங்களில் சமூக வலைத்தளங்களில் வைரலாகியது.
இதற்கு அவருடைய மகன் கௌதம் கார்த்திக் பேட்டிகளில் மறுப்பு தெரிவித்திருந்தார். குறையாத வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் காணொளியொன்று வெளியாகியுள்ளது.

அதில் கார்த்திக், எழுந்து நின்று பாடல் பாடி நடனமாடும் காட்சி உள்ளது. இந்த காணொளியை நடிகர், மூத்த பத்திரிகையாளர் என பன்முகங்களை கொண்ட சித்ரா லட்சுமணன் பகிர்ந்திருக்கிறார்.
நடனமாடி கொண்டே கம்பு சுற்றும் அளவுக்கு கார்த்திக் நலமாக இருக்கிறார்கள் என்ற கருத்துக்கள் தற்போது வைரலாகி வருகின்றன.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |