நடிகர் கரணின் இப்போ எப்படியிருக்காருனு தெரியுமா? வைரலாகும் புகைப்படம்
திரையுலகில் சிறுவயதிலிருந்தே நடிப்பிற்கு வந்த நடிகர் கரண் தற்போது எப்படியிருக்கின்றார் என்ற புகைப்படம் வைரலாகி வருகின்றது.
நடிகர் கரண்
தமிழ் சினிமாவான நம்மவர் திரைப்படத்தில் கமல்ஹாசனுக்கே வில்லனாக நடித்து அசத்திய இவர், ஸ்ரீ, காலமெல்லாம் காத்திருப்பேன், பண்ணாரி அம்மன், ராஜகாளி அம்மன், காதல் மன்னன் போன்ற படங்களில் நடித்து பிரபலமானார்.
கண்ணெதிரே தோன்றினாள் படத்தினை தற்போதும் அவதானிக்கும் ரசிகர்கள் இவரது நடிப்பினை பாராட்டவே செய்கின்றனர்.
அந்த அளவிற்கு தனது நடிப்பினை அர்ப்பணிப்புடன் செய்துள்ளார். இவர் கடைசியாக உச்சத்துல சிவா என்ற படத்தில் 2016ம் ஆண்டு நடித்தார்.
பின்பு எந்தவொரு சினிமாவிலும் நடிக்காமல் இருக்கும் கரணை தற்போதும் ரசிகர்கள் திரைக்கு வர காத்திருக்கின்றனர்.
இந்நிலையில் கரணின் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகின்றது. இந்த புகைப்படத்தில் உடல் எடை அதிகரித்து, முறுக்கு மீசையையும் வைத்து மிரட்டியுள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
