பத்திரிகை கொடுக்க ஆரம்பிச்சாச்சு.. காளிதாஸின் வருங்கால மனைவி என்ன செய்கிறார் தெரியுமா?
நடிகர் காளிதாஸ் ஜெயராமிற்கு விரைவில் திருமணம் நடக்கப் போவதாக சமூக வலைத்தளங்களில் செய்தி பரவலாக உள்ளது.
காளிதாஸ் திருமணம்
சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் தான் நடிகர் ஜெயராம்.
இவருடைய மகன் காளிதாஸ் ஜெயராம், தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகராக பார்க்கப்படுகிறார்.
இவருக்கு திருமண ஏற்பாடுகள் தடபுடலாக நடைபெற்று வருகின்றது.
தேதி மற்றும் இடம் பற்றி விவரங்கள் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்றாலும், பத்திரிகை விநியோகம் துவங்கி விட்டதாக காளிதாஸ் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்த நிலையில், காளிதாஸ் -தாரிணி தம்பதிகளின் முதல் திருமண பத்திரிகை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கொடுக்கப்பட்டுள்ளது.
காளிதாஸின் வருங்கால மனைவி என்ன செய்கிறார்?
காளிதாஸ் திருமணம் செய்துக் கொள்ளப்போகும் தாரணி என்பவர் ஒரு மாடல் அழகியாக இருக்கிறார்.
அந்த வகையில், தாரணி, கடந்த 2019ம் ஆண்டு மிஸ் தமிழ்நாடு பட்டத்தையும், கடந்த 2021 ஆம் ஆண்டின் மிஸ் யுனிவர்ஸ் இந்தியா போட்டிகளிலும் பங்கேற்றுள்ளார்.
இதனை தொடர்ந்து விளம்பர படங்களில் நடிகை தீபிகா படுகோனுடன் இணைந்து நடித்திருக்கிறார். காளிதாஸ், தாரணியை நீண்ட நாட்களாக காதலித்து வருகிறார்.
இவர்களுக்கான நிச்சயதார்த்தம் கடந்த 2023 ஆம் ஆண்டு நடந்து முடிந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |