உடற்பயிற்சியின் போது ஏற்பட்ட விபரீதம்: மருத்துவமனை சிகிச்சையில் பிரபல நடிகர்
பிரபல தெலுங்கு நடிகரான ஜுனியர் என்.டி.ஆர் ஜிம்மில் ஏற்பட்ட எதிர்பாராத விபத்து காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக இருந்து வரும் ஜுனியர் என்டிஆர் பாகுபலி படத்தின் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்தவர் ஆவார்.
தற்போது ஆர் ஆர் ஆர் என்ற சுதந்திர போராட்ட வீரர்களின் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படத்தில் நடித்துள்ள நிலையில், இப்படம் ஜனவரி மாதம் வெளியாகவுள்ளது. மேலும் இதைத் தொடர்ந்து அடுத்தடுத்து படங்களில் நடித்து வருகின்றார்.
இந்நிலையில் நடிகர் ஜூனியர் என்டிஆருக்கு வலது கையில் ஏற்பட்ட எலும்பு முறிவுக்காக மைனர் ஆப்பரேஷன் செய்யப்பட்டுள்ள தகவல் அவரது ரசிகர்களை சோகம் அடையச் செய்துள்ளது.
தீவிர உடற்பயிற்சியில் ஈடுபாடு கொண்ட ஜூனியர் என்டிஆர் எக்சர்சைஸ் செய்து கொண்டிருக்கும் போது, ஏற்பட்ட எலும்பு முறிவுக்காக தான் தற்போது அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சில நாட்கள் ஓய்விற்கு பின்பு மீண்டும் நடிப்பை தொடங்குவார் என்று மருத்துவர்கள் கூறியுள்ள நிலையில், ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.