நடிகர் ஜீவாவின் தந்தை ஆர்.பி.சவுத்ரி திடீர் உயிரிழப்பு... பேரதிர்ச்சியில் திரையுலகினர்
நடிகர் ஜீவாவின் தந்தை ஆர்.பி.சவுத்ரி சாலைவிபத்தில் உயிரிழந்துள்ளது திரையுலகினரை பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
ஆர்.பி.சவுத்ரி
பிரபல தயாரிப்பாளரும், நடிகர் ஜீவாவின் தந்தையுமான ஆர்.பி.சவுத்ரி ராஜஸ்தானை பூர்வீகமாக கொண்டவர். இவர் சூப்பர் குட் பிலிம்ஸ் வாயிலாக நாட்டாமை, சூர்யவம்சம் போன்ற பல வெற்றிப்படங்களைக் கொடுத்துள்ளார்.
சூப்பர் குட் ஃபிலிமஸ் தயாரிப்பு படங்கள் என்றாலே மக்கள் மத்தியில் தனி இடம் உண்டு. இவ்வாறு ஏகப்பட்ட வெற்றிப்படங்களை கொடுத்த தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரி கார்விபத்தில் அகால மரணமடைந்துள்ளார்.

இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மற்றும் இந்தி திரைப்படங்களையும் தயாரித்துள்ளார்.
நடிகர் ஜீவா நேற்றைய தினம் விஜய்யின் வெற்றியைக் குறித்து ஆனந்த கண்ணீர் விட்டு காணொளியினை வெளியிட்டிருந்தார். இந்நிலையில் இன்று தந்தையின் அகாலமரணம் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
விபத்து நடந்தது எங்கே?
ராஜஸ்தானின் ஜோத்பூரில் உதய்பூருக்கு சென்ற வழியில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில் சிக்கிய சவுத்திரியை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். இவருக்கு இரண்டு மனைவிகள் உள்ள நிலையில், ஜித்தன் ரமேஷ், நடிகர் ஜீவா மகன்கள் மட்டுமின்றி இன்னும் இரண்டு மகன்கள் உள்ளனர்.
சவுத்ரியின் உடலை நாளை சென்னைக்கு கொண்டுவர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |