சிம்புவுக்கு திருமணமா? யாரு பெண்ணு? உண்மையை அம்பலப்படுத்திய ஜெய்!
சிலம்பரசனுக்கு அடுத்த வருடம் திருமணம் என்று நடிகர் ஜெய் தெரிவித்துள்ளார்.
தமிழ் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கத்தின் விழா சென்னையில் நடைபெற்றது. இதில் நடிகர் ஜெய் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டுள்ளனர்.
அதில் பேசும் போதே திருமணம் எப்போது என்ற கேள்விக்கு, ‘சிம்பு திருமணத்திற்கு பிறகு நான் திருமணம் செய்து கொள்வேன்.
அனேகமாக சிம்புக்கு அடுத்த வருடம் திருமணம் நடந்து விடும் என்று நினைக்கிறேன்’ என பதிலளித்தார் ஜெய்.
நடிகர் ஜெய் கைவசம் பிரேக்கிங் நியூஸ், பார்ட்டி, எண்ணித்துணிக, சிவ சிவா, குற்றமே குற்றம் ஆகிய படங்கள் உள்ளன. இதுதவிர பெயரிடப்படாத புதிய படத்தில் நடிகர் ஜெய், சுந்தர் சி-க்கு வில்லனாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.