நகைச்சுவை நடிகர் கவுண்டமணியின் மனைவி காலமானார்: திரையுலகினர் அதிர்ச்சி
நகைச்சுவை நடிகர் கவுண்டமணியின் மனைவி சாந்தி(67) இன்று காலை 10்.30 மணிக்கு உடல்நல குறைவால் காலமானார்.
நடிகர் கவுண்டமணி
தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகராக 80 மற்றும் 90 களில் வலம்வந்தவர் தான் நடிகர் கவுண்டமணி.
செந்தில் மற்றும் கவுண்டமணி கொமடிகள் இன்றும் ரசிகர்களின் கவலையை மறக்கச் செய்து வருகின்றது.
1970ம் ஆண்டு வெளியான ‘ராமன் எந்தன் ராமனடி’ படத்தின் மூலம் சிறிய கதாபாத்திரத்தில் நடிகராக நுழைந்தார். 1971-ம் ஆண்டு வெளியான ‘தேனும் பாலும்’ படத்தில் சுப்பிரமணி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் கவுண்டமணி.
பின்பு பல படங்களில் நடித்து முன்னணி நகைச்சுவை நடிகராகவும் இருந்து வந்தார். நடிகர் கவுண்டமணி 1963ம் ஆண்டு ஷாந்தி என்பவரை திருமணம் செய்துகொண்டார்.

உச்சக்கட்ட கவர்ச்சி காட்டும் பாக்கியலட்சுமி ராதிகா.. இந்த விடயம் கோபிக்கு தெரியுமா? கலாய்க்கும் ரசிகர்கள்
காதல் திருமணம் செய்து கொண்ட இவரது மனைவியின் பெயர் சாந்தி. இந்த தம்பதிகளுக்கு செல்வி மற்றும் சுமித்ரா என இரண்டு மகள்கள் உள்ளனர்.
இந்நிலையில், கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் அவதியுற்று வந்த கவுண்டமணியின் மனைவி சாந்தி(67) இன்று காலமானார்.
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள இல்லத்தில் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |