நவரச நாயகன் கார்த்திக் மகனா இது? தொப்பையை குறைத்து ஸ்லிம்மாக மாறிய கௌதம்
நடிகர் கௌதம் கார்த்திக் கடும் உடற்பயிற்சி மேற்கொண்டு உடல் எடை குறைத்துள்ள காட்சி வைரலாகி வருகின்றது.
நடிகர் கௌதம் கார்த்திக்
நவரச நாயகன் என்று அழைக்கப்படும் நடிகர் கார்த்திக்கின் மகன் கௌதம் கார்த்திக். கடல் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்குள் அறிமுகமானார்.
அதன் பின்பு பல படங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமான இவரைக் குறித்து சில விமர்சனமும் எழுந்து வருகின்றது.
அதாவது ஜாதிய பின்னணி கொண்ட கதைகளில் அதிகம் நடிப்பதாக இவர் மீது விமர்சனம் வைக்கப்பட்டு வருகின்றது.

உடல் எடையைக் குறைத்த கௌதம்
விமர்சனத்திற்கு மத்தியிலும் நடிப்பில் கவனம் செலுத்தி வரும் நடிகர் கௌதம் கார்த்திக் ஆர்யா உடன் Mr. X என்ற படத்தில் நடித்திருக்கின்றார்.
தொப்பை மற்றும் உடல் எடை அதிகரித்து 96.9 கிலோ எடையில் காணப்பட்டுள்ளார். இப்படத்திற்காக தீவிரமாக உடற்பயிற்சி மேற்கொண்டு உடல் எடையைக் குறைத்துள்ளார்.
உடல் எடையினைக் குறைப்பதற்கு அவர் வெறித்தனமாக உடற்பயிற்சி மேற்கொண்ட காணொளியும் வெளியாகியுள்ளது. இதனை அவதானித்த ரசிகர்கள் ஆச்சரியத்தில் காணப்படுகின்றனர்.
9 months of blood, sweat and tears, pushing through limitations, resisting cravings, chasing consistency and overcoming old injuries.
— Gautham Ram Karthik (@Gautham_Karthik) April 14, 2026
With the help of my trainer Dinesh preparing for #Mr.X has been one of the greatest transformative journeys of my life.
Forever grateful to my… pic.twitter.com/EIqDEixxHB
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |