பழம்பெரும் நடிகர் ஜி.சீனிவாசன் காலமானார்
பழம்பெரும் நடிகர் ஜி. சீனிவாசன் உடல்நலக் குறைவு காரணமாக இன்று உயிரிழந்துள்ளார்.
ஜி. சீனிவாசன்
இயக்குனர், எழுத்தர், நடிகர் என பன்முக திறமையைக் கொண்டவர் தான் ஜி.சீனிவாசன்(95).
இவர் 8 படங்களை எழுதியும், 3 படங்களை இயக்கியுமுள்ளார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் மொழிகளிலும் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
இவரது மனைவி புலியூர் சரோஜா பிரபல நடன இயக்குநராக இருந்தவர். இவர்களின் மகன் சில ஆண்டுகளுக்கு முன்பு விபத்தில் உயிரிழந்தார்.
இந்நிலையில் இவர் உடல்நலக்குறைவினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று மதியம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
ஏவிஎம் மின் மயானத்தில் இவரது அடக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், பல திரைப்பிரபலங்கள் இறுதி அஞ்சலி செலுத்தியதுடன், தங்களது இரங்கலையும் தெரிந்து வருகின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
