பஹத் பாசிலின் புதிய `Ferrari Purosangue' - விலை,சிறப்பு என்ன தெரியுமா?
நடிகர் பஹத் பாசில் Ferrari Purosangue காரை புதிதாக வாங்கியிருக்கிறார். இதன் சிறப்பம்சம் விலை குறித்து பார்க்கலாம்.
Ferrari Purosangue
பொதுவாக நாம் எதாவது ஒரு பொருள் மீது ஈர்க்கபட்டு தான் இருப்போம். அப்படி இருக்கையில் கார் மீது ஒரு சிலருக்கு ஈர்ப்பு அதிகம். ஆனால் பிரபலங்கள் தங்கள் வளர்ச்சிக்கு ஏற்றவாறு தங்கள் காரையும் மாறறி கொள்வது வழக்கம்.
அப்படி தான் தற்போது நடிகர் பஹத் பாசில் புதிய `Ferrari Purosangue' காரை வாங்கி உள்ளார். இவருக்கு கார் கலெக்ஷன் என்றால் மிகவும் பிடிக்கும்.
இவரின் கார் பட்டியலை எடுத்து பார்த்தால் அவ்வளவு அருமையாக இருக்கும் அனைத்தும். விலையுயர்ந்த கார்களை வாங்கி அழகுபார்ப்பதில் இவரை அடித்துக்கொள்ள ஆள் இல்லை.
இவரிடம் லம்போர்கினி, போர்ஷே, மெர்சிடிஸ்-பென்ஸ் G63 AMG, ரேஞ்ச் ரோவர் ஆட்டோபயோகிராபி, எல்டபிள்யூபி, உருஸ், லேண்ட் ரோவர் டிஃபெண்டர் 90 V8, போர்ஷே 911 கரேரா எஸ் உள்ளிட்டப் பல கார்களை இருக்கிறது.
புதிய கார் Ferrari Purosangue
நடிகர் பஹத் பாசிலிடம் இல்லாத பிராண்ட் கார்களில் மிக முக்கியமானது ஃபெராரி. அதனால் தான் தற்போது இந்த பிராண்டில் கார் வாங்கி இருக்கிறார்.
ஃபெராரி புரோசங்க்கு (Ferrari Purosangue) எஸ்யூவி இத்தாலிய சூப்பர்கார் தயாரிப்பாளரின் முதல் எஸ்யூவி இதுதான். இது முத்போன்ற வெள்ளை நிறத்தால் ஜொலிக்கிறது.
இந்த காரில் பஹத் பாசில் தன்னுடைய விருபத்திற்கு ஏற்பவும் வடிவமைத்துள்ளார்.
இதனால் இந்தியாவிலேயே உள்ள ஃபெராரி புரோசங்கு கார்களில் மிகவும் தனித்துவமான வடிவமைப்புகளில் ஒன்றாக இருக்கிறது. கேரள மாநிலத்தில் இதுவெ மதல் கார். Bianco Cervino என்பதை தேர்வு செய்துள்ளார்.
காரின் சிறப்பு
Ferrari Purosangue களில் இதுவே முதல் எஸ்யூவி கார் ஆகும். இந்த எஸ்யூவியில் 6.5 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜின் இருக்கிறது.
இந்த இன்ஜின் 725 PS சக்தியையும், 716 Nm உச்ச திறனையும் கொண்டுள்ளது. இந்த கார் ஆஸ்டன் மார்ட்டின் DBX போன்ற கார்களுக்குப் போட்டியாக அறிமுகப்படுத்தப்பட்டது.
இதன் ஷோரூம் விலை ரூ.10 கோடி ஆகும். இதை பெங்களூருவைச் சேர்ந்த கார் சேகரிப்பாளர் பூபேஷ் ரெட்டி, தமிழ் நடிகர் விக்ரம், ஆகாஷ் அம்பானி போன்றவர்கள் வைத்திருக்கின்றனர்.
அம்பானி குடும்பம், ஒன்றுக்கு பதிலாக கிட்டத்தட்ட ஒரே மாதிரியான இரண்டு ஃபெராரி புரோசங்கு கார்களை வைத்துள்ளது.

அடுத்தடுத்து அதிர்ச்சி கொடுக்கும் ஜாய் கிறிஸ்டா.. கூலாக கல்யாணம் வீடியோ பகிர்ந்த மாதம்பட்டி ரங்கராஜ்
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |