மனைவி பிரிந்தாலும் மாமனாருக்காக தனுஷின் உருக்கமான பதிவு
மனைவி பிரிந்தாலும் ஒரு ரசிகராக தனுஷ் போட்ட டுவிட் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
தனுஷ்
தமிழ் சினிமாவில் டாப் நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் நடிகர் தனுஷ்.
இவர் நடிப்பில் கடைசியாக, “கேப்டன் மில்லர்” திரைப்படம் வெளியானது.
தனுஷ், நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யாவை திருமணம் செய்து கொண்டார். 18 வருடங்களுக்கு பின்னர் திடீரென விவாகரத்தை அறிவித்துவிட்டு தற்போது இருவரும் பிரிந்து வாழ்கின்றனர்.
ஆனாலும் பொது நிகழ்ச்சிகள், வீட்டு விஷேசங்கள் என இருவரும் ஒன்று கூட வேண்டிய பல இடங்களில் சந்தித்து கொள்கிறார்கள்.
மாமனாருக்காக போட்ட பதிவு
இந்த நிலையில், இன்று “லால் சலாம்” திரைப்படம் திரைக்கு வந்துள்ளது.
அதே சமயம், ரஜினியின் ரசிகனான தனுஷ், லால் சலாம் படத்திற்கு அவருடைய டுவிட்டர் பக்கத்தில் பதிவு போட்டு வரவேற்பு கொடுத்துள்ளார்.
மேலும் நடிகர் தனுஷ் லால் சலாம் வெற்றியடைய வேண்டும் என வாழ்த்தியதுடன், “என் அன்பு தாய் ஐஸ்வர்யாவுக்கு வாழ்த்துகள்” என ரஜினி போட்ட பதிவையும் ரிபோஸ்ட் செய்துள்ளார்.
இந்த பதிவுகள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
Lal salaam trailer https://t.co/jUlBWLLtTX Best wishes to the team. God bless. #superstar #thalaivar
— Dhanush (@dhanushkraja) February 5, 2024
என் அன்பு தாய் ஐஸ்வர்யாவுக்கு என் அன்பு சலாம்.உங்களுடைய லால் சலாம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்@ash_rajinikanth #LalSalaam pic.twitter.com/bmRe8AGLkN
— Rajinikanth (@rajinikanth) February 9, 2024
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |