தனுஷின் மூத்த மகன் யாத்ரா ஹீரோவாக அறிமுகமாகிறாரா? இயக்குநர் யார்ன்னு தெரியுமா?
நடிகர் தனுஷின் மூத்த மகனான யாத்ரா, தமிழ் திரையுலகில் ஹீரோவாக அறிமுகமாக உள்ளதாக வெளியாகியுள்ள தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
நடிகர் தனுஷ்
தமிழ் சினிமாவைத் தாண்டி ஹிந்தி, தெலுங்கு மற்றும் ஹாலிவுட் திரைப்படங்களிலும் நடித்து தனது திறமையை நிரூபித்துள்ள தனுஷ், நடிகராக மட்டுமல்லாமல் பாடகர், தயாரிப்பாளர் மற்றும் இயக்குநராகவும் வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறார்.

தனுஷ், 2004ஆம் ஆண்டு ஐஸ்வர்யா ரஜினிகாந்தை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு யாத்ரா மற்றும் லிங்கா என்ற இரு மகன்கள் உள்ளனர்.
இதில் மூத்த மகனான யாத்ரா சமீபத்தில் தனது பள்ளிப் படிப்பை நிறைவு செய்துள்ளார். இளைய மகனான லிங்கா தற்போது பள்ளியில் கல்வி கற்று வருகிறார்.

விவாகரத்திற்குப் பிறகும், தனது மகன்களை திரைப்பட விழாக்கள் மற்றும் முக்கிய நிகழ்ச்சிகளுக்கு அழைத்துச் செல்வதை தனுஷ் வழக்கமாகக் கொண்டுள்ளார்.
இதனால், யாத்ரா மற்றும் லிங்கா எப்போது சினிமாவில் அறிமுகமாகப் போகிறார்கள் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் நீண்ட நாட்களாக இருந்து வந்தது.அந்தக் கேள்விக்கு தற்போது பதில் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.

ஹீரோவாகும் யாத்ரா
யாத்ராவை கதாநாயகனாக அறிமுகப்படுத்தும் படத்தை தனுஷ் இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மாஸ் கமர்ஷியல் திரைப்படமாக உருவாகவுள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு, இந்த ஆண்டின் இறுதியில் அல்லது அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் ஆரம்பமாகலாம் என கூறப்படுகிறது.
தற்போது இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகி வரும் தனது 55வது திரைப்படத்தில் தனுஷ் நடித்து வருகிறார்.

அந்தப் படத்தின் பணிகள் நிறைவடைந்த பிறகு, தனது மகனை வைத்து புதிய படத்தை இயக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், இந்தப் படத்தை RTake Studios நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும், இசையமைப்பாளராக ஜி.வி. பிரகாஷ் குமார் பணியாற்ற உள்ளதாகவும் கூறப்படுகிறது.

படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் தொடக்க விழா விரைவில் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், இதுகுறித்து இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |