நடிகர் தனுஷின் சகோதரிகளை பார்த்திருக்கிறீர்களா? வைரலாகும் லேட்டஸ்ட் க்ளிக்
நடிகர் தனுஷ் தனது சகோதரியுடன் இருக்கும் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
நடிகர் தனுஷ்
தமிழ் சினிமாவில் டாப் நடிகர்களுடன் ஒருவராக திகழ்ந்து வருபவர் தான் நடிகர் தனுஷ். வித்தியாசமான கதாப்பாத்திரம், கதைக்களம் என தேர்ந்தெடுத்து படங்களில் நடித்து வருகிறார்.
இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான கேப்டன் மில்லர் திரைப்படம் ரசிகர்கள் இடையே கலவையான விமர்சனத்தை பெற்றது.
இதனை தொடர்ந்து தனுஷின் 51 வது திரைப்படத்தை தெலுங்கு இயக்குநர் சேகர் கம்மூலா இயக்குகி வருகிறார்.
இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா, நாகர்ஜூன உள்ளிட்டோர் நடிக்கின்றனர். தற்போது இந்த திரைப்படம் குறித்து ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்ப்பார்ப்பு காணப்படுகின்றது. தற்போது அடுத்தடுத்த படங்களில் பிஸியாக இயங்கி வருகின்றார்.
இவருக்கும் நடிகர் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யாவுக்கும் திருமணமாகி 2 ஆண் பிள்ளைகள் இருக்கின்றனர் இந்நிலையில் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக சில ஆண்டுகளாக பிரிந்து வாழ்கின்றனர்.
நடிகர் தனுஷின் சகோதரரான செல்வராகவனை பெரும்பாலும் அனைவருக்கும் தெரிந்திருக்கும் இயக்குனரான செல்வராகவன் தான் தனுஷை சினிமாவில் அறிமுகப்படுத்தினார்.
இந்நிலையில் தனுஷிற்கு 2 சகோதரிகள் இருப்பது பெரிதாக யாருக்கும் தெரிந்திருக்காது. தனுஷிற்கு கார்த்திகா, விமலா என இரு சகோதரிகள் இருக்கின்றனர்.
இருவரும் திருமணமாகி செட்டில் ஆன நிலையில், சமீபத்தில் நடிகர் தனுஷின் சகோதரி வீட்டில் இடம்பெற்ற விஷேசத்தையடுத்து, அவர்களின் புகைப்படம் இணையத்தில் லைக்குகளை குவித்து வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |