நடிகர் தனுஷால் நித்யா மேனனுக்கு வந்த புதிய சோதனை!
நடிகர் தனுஷ் நடிப்பில் திரையரங்கில் வெளியாகி வெற்றி நடைபோடும் படம் தான் திருச்சிற்றம்பலம். சமீபமாக வந்த தனுஷின் ஓடிடி படங்கள் வெற்றி பெறாத நிலையில், இப்படம் வெற்றி பெற்றுள்ளது.
இந்த படத்தில் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக மூன்று கதாநாயகிகள் நடித்திருந்தனர். அதில் நித்யா மேனன், ராசி கன்னா, பிரியா பவானி சங்கர் அகியோர் நடித்திருந்தனர்.
இந்த படத்தில் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தது. சோபனா என்ற கதாபாத்திரத்தில் நித்தியா மேனன் நடித்திருந்தது தான்.
அப்படி சொல்லாதீங்க
இந்த நிலையில், இப்படத்தின் வெற்றிக்கு பின் நித்யா மேனன் பேட்டியளித்து வருகிறார். திருச்சிற்றம்பலம் படத்தின் பாடலான தாய்க்கிழவின் பாடல் வெற்றி பெற்ற நிலையில், அந்த பாடலை தனுஷ் நித்யா மேனனுக்காக பாடியிருப்பார்.
இந்த பாடலை வைத்து நித்யா மேனனை பல ரசிகர்கள் தாய்க்கிழவி என அழைக்க தொடங்கி இருக்கிறார்கள். மீம்ஸ்களில் சோபனா என செல்லமாக கூறி வருகின்றனர்.
தாய்க்கிழவி
இதனிடையே, இதையறிந்த நித்யா மேனன் இது பிடிக்காது ப்ளீஸ் என்ன அப்படி கூப்பிடாதீங்க என ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.
அதையும் கோபப்படாமல் சிரித்துக்கொண்டே ரசிகர்களுக்கு பிடிக்கும் படி நித்யா மேனன் சொல்லி உள்ளார்.
மேலும் திருச்சிற்றம்பலம் படத்தின் மூலமாக நித்யா மேனனுக்கு தமிழில் நிறைய பட வாய்ப்புகள் வர வாய்ப்புகள் அதிகரித்துள்ளது.