ஆடம்பர சொகுசு கார் வாங்கி அசத்திய தாடி பாலாஜி- வாயடைத்துபோன ரசிகர்கள்; வைரலாகும் புகைப்படம்!
தமிழ் சினிமாவில், விவேக், வடிவேலு உள்ளிட்ட காமெடி லெஜண்டுகளுடன் ஏகப்பட்ட படங்களில் துணை காமெடியனாக நடித்து அசத்தியவர் தாடி பாலாஜி.
எப்போதுமே தாடி வைத்துக் கொண்டு படங்களில் நடித்து வந்த அவரை தாடி பாலாஜி என்றே அனைவரும் அழைக்க ஆரம்பிக்க அவரும் தாடியை தனது அடையாளமாகவே ஆக்கி விட்டார்.
இவர், விஜய் டிவியில் பல வருடங்களாக தொடர்ந்து பணியாற்றி வரும் தாடி பாலாஜி கலக்கப் போவது யாரு உள்ளிட்ட ஏகப்பட்ட காமெடி ஷோக்களுக்கு ஜட்ஜாக செயல்பட்டு வருகிறார்.
இதனையடுத்து, முதல் மனைவியை பிரிந்த தாடி பாலாஜி இரண்டாவதாக நித்யா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகளும் உள்ளார்.
குடும்பத்தில் ஏற்பட்ட சந்தேகம் காரணமாக இருவருக்கும் இடையே பிரச்சனை எழுந்து விவாகரத்தில் கொண்டு போய் முடிந்தது. இந்த நிலையில், தாடி பாலாஜி தற்போது புதிதாக BMW கார் ஒன்றை வாங்கி உள்ளார்.
அந்த காருக்கு முன்னால் நின்றபடி அவர் சிரித்தபடி போஸ் கொடுத்துள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றன. விஜய் டிவி நண்பர்களும், சினிமா ரசிகர்களும் தாடி பாலாஜி சொகுசு கார் வாங்கிய நிலையில் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
பலரும் விஜய் டிவி பிரபலங்கள் தொடர்ந்து ஆடம்பர கார் வாங்கி வருவதை நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.