Daniel Balaji: நடிகர் டேனியல் பாலாஜி திருமணம் செய்யாத காரணம் என்ன?
வில்லன் நடிகராக ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த நடிகர் டேனியல் சில தினங்களுக்கு முன்பு மாரடைப்பினால் உயிரிழந்த நிலையில் இவரைக் குறித்த தகவல் வெளியாகி வருகின்றது.
நடிகர் டேனியல் பாலாஜி
மறைந்த நடிகரான முரளியின் உடன்பிறக்காத தம்பி தான் டேனியல் பாலாஜி. சின்னத்திரை சீரியல்களில் நடித்த இவர், காக்கா காக்க படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.
பின்பு வேட்டையாடு விளையாடு திரைப்படத்தில் கொடூரமான சைக்கோ வில்லனாக நடித்த இவரின் உண்மையான பெயர் அமுதன் என்பதாகும்.
அடுத்தடுத்து பல படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் அவர்களுக்கு பிடித்தமான வில்லனாக வலம்வந்தவர், சில தினங்களுக்கு முன்பு திடீர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.
திருமணம் செய்து கொள்ளவில்லை ஏன்?
மக்களுக்காக நல்லது செய்ய வேண்டும் என்று முடிவெடுத்ததால் டேனியல் பாலாஜி திருமணம் செய்து கொள்ளவில்லை என அவரது நெருங்கிய வட்டாரங்களில் இருப்பவர்கள் கூறியிருக்கின்றனர்.
மேலும், கடவுள் நம்பிக்கை அதிகம் கொண்டவராக இருந்ததால், திருமணத்தின் மீது அதிக நாட்டம் இல்லை என்று கூறப்படுகின்றது.
சிறந்த வில்லனாக ரசிகர்கள் மத்தியில் வலம் வந்த இவர், உண்மையிலேயே நல்ல மனம் படைத்தவர் ஆவார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |