ரஜினிக்கே டஃப் கொடுத்த வில்லன் நடிகர் சரண்ராஜ்... இப்போ எப்படி இருக்காருனு தெரியுமா?
தமிழ் சினிமாவில் குணச்சித்திர மற்றும் வில்லன் வேடத்தில் நடித்து பிரபலமான நடிகர் சரண் ராஜின் தற்போதைய புகைப்படம் வைரலாகி வருகின்றது.
நடிகர் சரண்ராஜ்
தமிழ் சினிமாவின் வில்லன் நடிகராகவும், குணச்சித்திர வேடங்களிலும் நடித்து பிரபலமான நடிகர் சரண்ராஜ், 600க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
ஷங்கர் இயக்கத்தில் அர்ஜுன் நடிப்பில் வெளியான ஜென்டில்மேன் படத்தில் பொலிசாக மிரட்டினார்.
தொடர்ந்து ரஜினிகாந்த் உடன் தர்மதுரை, பாட்ஷா, பாண்டியன், வீரா உள்ளிட்ட படங்களிலும் முக்கிய கதாபாத்திரத்தில் சரண்ராஜ் நடித்திருந்தார்.
பின்பு சினிமா வாய்ப்புகள் குறைந்த நிலையில் சினிமாவிலிருந்து ஒதுங்கிய இவரை பல ஆண்டுகளாக பார்க்கமுடியாமல் உள்ளது. இந்நிலையில் இவரது சமீபத்திய புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |