தந்தையை உரித்து வைத்திருக்கும் பிரபல காமெடி நடிகரின் மகன்! ஹீரோ போல இருக்காரே - வைரலாகும் புகைப்படம்
பிரபல காமெடி நடிகரான சாம்ஸின் மகனின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
நடிகர் சாம்ஸ் தமிழ் சினிமாவில் அஜித் நடிப்பில் வெளியான காதல் மன்னன் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர்.
ஒரு சில படங்களில் நடித்திருந்தாலும் இவரது காமெடி ரசிகர்கள் மனதில் நீங்காத ஒரு இடத்தினை பிடித்திருக்கின்றது.
வைரலாகும் மகனின் புகைப்படம்
இப்படி ஒரு நிலையில் இவரது மகன் யோகன் தற்போது சினிமாவில் அறிமுகமாக உள்ளார்.
தற்போது இயக்குனர் ராமிடம் உதவி இயக்குனராக யோகன் பணியாற்றி வருகிறார். இவர் கூத்துப்பட்டறையில் நடிப்பு பயிற்சியையும், தனியார் திரைப்படக் கல்லூரியில் இயக்குநர் பயிற்சியையும் முடித்துள்ளார்.
இந்நிலையில் தற்போது நடிகராக களம் இறங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இவரின் புகைப்படத்தினை பார்த்த ரசிகர்கள் தந்தை சாம்ஸ் போலவே இருப்பதாக பதிவிட்டு வருகின்றனர்.