நெப்போலியன் மகன் திருமணத்தில் இப்படியொரு விஷயம் இருக்கா? கொளுத்தி போட்ட பயில்வான்
நெப்போலியன் மகன் திருமணத்தில் ஒரு சிக்கல் இருப்பதாக பயில்வான் பேட்டியொன்றில் பேசியுள்ளார்.
நடிகர் நெப்போலியன்
தமிழ் சினிமாவில் வில்லனாக அறிமுகமாகி பின்னர் கதாநாயகனாக கலக்கியவர் தான் நடிகர் நெப்போலியன்.
சினிமாவில் டாப்பில் இருந்த காலப்பகுதியில் அரசியலிலும் ஈடுபாடு காட்டி வந்தார்.
நடிகர் நெப்போலியன் ஜெயசுதா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு தனுஷ் மற்றும் குணால் என்ற இரண்டு மகன்கள் இருக்கின்றனர்.
இவர்களில் நெப்போலியனின் இளைய மகன் உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறார்.
அக்ஷயா- தனுஷ் திருமணம்
photo album: Anant Ambani-Radhika Merchant Wedding: பங்கேற்ற பிரபலங்கள் யார் யார் தெரியுமா? வைரல் புகைப்படங்கள்
இந்த நிலையில், 25 வயதாகும் நெப்போலியன்- மகன் தனுஷ்க்கு திருமணம் செய்யய ஏற்பாடு செய்துள்ளார்.
முதலில் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. இது குறித்து தனுஷ் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் காணொளியொன்றை பதிவிட்டுள்ளார்.
நெப்போலியன் மருமகள்- அக்ஷயாவின் சொந்த ஊர் திருநெல்வேலி மாவட்டம் தான். திருநெல்வேலி மாவட்டம் மூலக்கரைப்பட்டியை சார்ந்த விவேகானந்தர் என்பவரின் மகள் என தெரியவந்துள்ளது.
பயில்வான் ஓபன் டாக்
இது குறித்து பேசிய பயில்வான், “ நெப்போலியன் மகன் கல்யாணத்திற்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மணப்பெண் திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்தவர் என்பதால் திருநெல்வேலியின் வழக்கப்படி மணமகள் வீட்டிற்கு வந்து தான் மணமகன் திருமணம் செய்ய வேண்டும்.
மாறாக நெப்போலியன் மகன் தனுஷ் அமெரிக்காவில் இருக்கிறார். இவரால் விமானத்தில் பயணம் செய்ய முடியாது. இதனால் நெப்போலியன் குடும்பத்தோடு கப்பலில் வருவதற்கு சொகுசு கப்பலை புக் பண்ணி இருக்கிறார்.
ஆனாலும் திருமணம் தேதி இன்னும் முடிவு செய்யவில்லை என்பதால் மணமகளை அமெரிக்காவிற்கே கூட்டிக் கொண்டு போய் அங்கே வைத்து திருமணம் செய்வதற்கும் ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கிறது..” என பேசியுள்ளார்.
இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியாகியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |