3 மணிக்கு கைக்குழந்தையுடன் வந்த பெண்.. சதி வேலை நடக்குது- பயத்தில் புகார் கொடுத்த நடிகர் பாலா
"என் முதல் மனைவி சாதாரணமானவர் அல்ல.. ஏதோ பெரிய சதி இருக்கு...” என நடிகர் பாலா பேசியது ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளது.
நடிகர் பாலா
தமிழ் சினிமாவில் கடந்த 2003ம் ஆண்டு வெளியான அன்பு திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் நடிகர் பாலா.
இந்த பட வெற்றியை தொடர்ந்து பல படங்களில் கதாநாயகராக நடித்துள்ளார். அவருடைய அண்ணன் சிவா இயக்கத்தில் உருவான வீரம், அண்ணாத்த போன்ற படங்களிலும் குணச்சித்திர வேடத்தில் நடித்திருப்பார்.
இதனை தொடர்ந்து மலையாள திரையுலகில் நடித்து வந்த பாலா கடந்த 2010ம் ஆண்டு பிரபல பாடகி அம்ருதா சுரேஷ் என்பவரைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
2 விவாகரத்து
பின்பு 2019ம் ஆண்டு அவரை விவாகரத்து செய்துள்ள நிலையில், தற்போது 12 வயதாகும் அவந்திகா என்ற மகளும் உள்ளார்.
பாலாவுடைய முதல் மனைவியைப் பிரிந்த நிலையில், இரண்டாவதாக 2021ம் ஆண்டு எலிசபெத் என்ற மருத்துவரை திருமணம் செய்து, அவரையும் பிரிந்தார். ஆனால் இருவரும் தொடர்ந்து நண்பர்களாக இருப்போம் எனக் கூறியிருக்கிறார்.
நடிகர் பாலா தன்னுடைய மனைவியிடம் இருந்து விவாகரத்து பெற்று பிரிந்தாலும், அவ்வபோது மகள் மீதான பாசத்தை வெளிப்படுத்தி வந்தார்.
சதி வேலை நடக்குது..
இந்த நிலையில் நடிகர் பாலா பற்றிய உண்மைகளை அவரின் அன்பு மகள் சமூக வலைத்தளங்களில் அம்பலத்துள்ளார்.
இதனை தொடர்ந்து பாலா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார். இந்த சமயத்தில் நடிகர் பாலா, “என் வீட்டுக்கு அதிகாலை 3.45 மணிக்கு கை குழந்தையுடன் ஒரு பெண்ணும், ஒரு ஆணும் வந்து இருந்தார்கள். அந்த ஆண் பெல்லை அடித்து விட்டு கதவு திறக்காததால் இருவரும் சென்றுவிட்டனர்.
அந்த நேரத்தில் அந்த பெண் கைக்குழந்தையுடன் வீட்டுக்கு வர என் காரணம். என்னை ஏதோ ஒரு பெரிய மோசடியில் சிக்க வைக்க முயற்சி நடந்து வருகிறது. இதுகுறித்து காவல் நிலையத்தில் ஆதாரத்துடன் வீடியோவை அனுப்பி இருக்கிறேன்..” என கூறியுள்ளார்.
இந்த காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |