நடிகர் முரளியின் மகள் இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா? நடிகைகளை மிஞ்சிய அழகு
நடிகர் முரளி மகள்- காவியா பற்றிய விவரங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
நடிகர் முரளி
தமிழ் சினிமாவில் இன்றும் ரசிகர்களால் மறக்க முடியாத நடிகராக இருப்பவர் தான் நடிகர் முரளி.
இவர், 80களில் தமிழ் சினிமாவை கட்டி ஆண்டவர், அத்துடன் முரளி கன்னட திரையுலகின் பிரபலமான தயாரிப்பாளர் மற்றும் இயக்குனராக இருந்த சித்தலிங்கையாவின் மகன் ஆவார்.
"பூவிலங்கு" திரைப்படத்தின் மூலம் கோலிவுட்டில் கதாநாயகனாக முரளி, அப்படத்தை தொடர்ந்து பகல் நிலவு, வண்ணக் கனவுகள், புது வசந்தம், இதயம், ஒரு தலைராகம், சுந்தரா டிராவல்ஸ், காலமெல்லாம் காதல் வாழ்க, பொற்காலம், வெற்றிக் கொடிகட்டு உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
இந்த திரைப்படங்கள் யாவும் முரளிக்கு நினைத்து பார்க்க முடியாத மார்க்கட்டை உருவாக்கியது.
இதற்கிடையில் முரளிக்கு திருமணமாகி 3 பிள்ளைகள் இருக்கின்றனர். இதில் கடைசி மகன் அதர்வா தந்தையை போல் சினிமா பக்கம் வந்து விட்டார். இரண்டாவது மகன் சினிமாவிற்கு வராமல் குடும்பத்துடன் செட்டிலாகி விட்டார். இவரின் திருமணத்தில் கூட விஜய் உட்பட பல சினிமா பிரபலங்கள் கலந்து கொண்டிருந்தனர்.
மகளின் தற்போதைய நிலை
இந்த நிலையில் முரளியின் மூத்த மகளான காவியா சினிமாத்துறையில் ஆர்வம் காட்டாமல் இருந்து வருகிறார். இவர் தற்போது வைத்தியராக இருக்கிறார்.
சென்னை- காவேரி மருத்துவமனையில் காது மூக்கு தொண்டை நிபுணராக இருந்து வரும் காவியாவிற்கு திருமணமாகி கணவன், குழந்தைகள் என செட்டிலாகி விட்டார்.
இப்படியொரு சந்தர்ப்பத்தில் முரளி பிள்ளைகளின் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக உள்ளது.
புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள், “ அசல் அம்மா போலவே இருக்கிறாரே...” என கருத்துக்களை பதிவு செய்து வருகின்றார்கள். அத்துடன் இவற்றையெல்லாம் பார்க்க நடிகர் முரளி நம்மோடு இல்லை என்பதும் வறுத்தமளிக்கின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |