17 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் அப்பாவாகிய பக்ரு!
நடிகர் பக்ருவிற்கு இரண்டாவது குழந்தை பிறந்துள்ளது.
“கின்னஸ் பக்ரு“ என்று பிரபலமாக அறியப்படும் இவரின் பெயர் அஜய் குமார்.
ஆரம்ப காலத்தில் மிமிக்ரி கலைஞராக அறிமுகமான பக்ரு பின்னர் நடிப்புத்துறையில் இருந்த ஆர்வத்தினால் நடிக்க வந்துள்ளார்.
பொருளாதாரத்தில் BA பட்டதாரியான இவர், கணினி அறிவியலில் டிப்ளமோ படித்துள்ளார்.
இவரின் உயரம் (2 அடி 6 அங்குலம் (76 செ.மீ.) ஆகும். சினிமாவில் பக்ரு ஒரு முழு நீளத் திரைப்படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் நடித்ததற்காக மிகக் குறுகிய நடிகர் என்ற கின்னஸ் உலக சாதனையில் அவர் நுழைந்துள்ளார்.
வினயன் இயக்கிய அற்புத தீவு என்ற மலையாளத் திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தார்.
பின்னர் இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் டப் செய்யப்பட்டது. தமிழில் ஜீவா நடிப்பில் கடந்த 2006 ஆம் ஆண்டு வெளியான ‘டிஷ்யூம்’ திரைப்படத்தில் அமிதாப் என்ற கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்.
இவர் 2006 ம் ஆண்டு காயத்ரி மோகன் என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.
இவருக்கு 14 வயதில் ஒரு மகளும் இருக்கிறார். திருமணமாகி 17 வருடங்களின் பின் மீண்டும் ஒரு பெண் குழந்தைக்கு தந்தையாகியுள்ளார் பக்ரு.
மகளை கையில் ஏந்தியபடி மூத்த மகளுடன் பக்ரு இருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது.