அஸ்வினுக்கு திருமணமா? ஷாக்கில் இளம் ரசிகைகள்.. பொண்ணு யார் தெரியுமா?
குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் பிரபலமும், நடிகருமான அஸ்வின் குமாருக்கு திருமணம் என்ற தகவல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
அஸ்வின் குமார்
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று தான் குக் வித் கோமாளி.
இந்த நிகழ்ச்சியில் குக்காக இருந்து அஸ்வின் குமார் மக்கள் மத்தியில் நீங்காத இடத்தை பிடித்து கொண்டார்.
ஆபிஸ், ரெட்டை வால் குருவி ஆகிய சீரியல்களில் நடித்து விட்டு தற்போது வெள்ளித்திரையில் செம்பி, ஓ மன பெண்ணே போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.
திருமணமா?
இந்த நிலையில் அஸ்வின் குமாருக்கு விரைவில் திருமணம் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அஸ்வின் பிரபல தயாரிப்பாளர் ஒருவரின் மகளை அவர் மணக்கவுள்ளார்.
இது காதல் திருமணமா? அல்லது பெற்றோர்களால் நிச்சயிக்கப்படுகிற திருமணமா? என்ற தகவல் வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |