நடிகர் ஆர்யாவின் அம்மா, அப்பாவை பார்த்துள்ளீர்களா? வைரலாகும் புகைப்படம்
தமிழ் சினிமாவில் ஒரு கதாபாத்திரத்திற்காக தன்னை எந்த எல்லைக்கும் வருத்திக் கொண்டு நடிக்கும் நடிகர்கள் விரல் விட்டு எண்ணக்கூடியவர்கள் தான் இருக்கின்னர்.
அதில் ஒருவர் தான் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுள் ஒருவராக வலம் வரும் நடிகர் ஆர்யா.
நடிகர் ஆர்யா
கடந்த 2005ஆம் ஆண்டு வெளியான அறிந்தும் அறியாமலும் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமான இவர் எல்லா நடிகர்களுடனும் எப்போதும் சகஜமாக பழகக்கூடியவர்.
நாயகனாக நிறைய படங்கள் நடித்துள்ளார், ஆனால் அதைவிட நிறைய படங்களில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.
2021 ஆம் ஆண்டு பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் வெளியான சார்பட்டா பரம்பரை திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
நடிகர் ஆர்யா வனமகன் திரைப்பட நடிகை சயீஷாவை காதலித்து 2019 ஆம் ஆண்டு கரம்பிடித்தார். இவர்கள் இருவருக்கும் ஒரு பெண்குழந்தை இருக்கிறார்.
இந்நிலையில், நடிகர் ஆர்யா இளம் வயதில் தனது அம்மா அப்பாவுடன் எடுத்துக்கொாண்ட புகைப்படம் தற்போது இணையத்தில் ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |