நடிகர் அர்ஜுன் தாஸ்க்கு ரகசியமாக நிச்சயதார்தமா? பொண்ணு யார்?
தமிழ் சினிமாவில் நடிகர் அர்ஜுன் தாஸ் நடிப்பு திறமையால் மட்டுமல்ல அவரது கம்பீரமான குரலாலும் மக்கள் மத்தியில் பிரபலமானவர். இந்த நிலையில் தற்போது இவர் திருமணத்துக்கு தயாராகி வருவதாக தகவல் கசிந்துள்ளது.

நடிகர் அர்ஜுன் தாஸ்
அர்ஜுன் தாஸ் என்றால் நினைவுக்கு வருவது அவரின் கம்பீரமான குரல் தான். இவருடைய குரழல் ஆளுமைக்காக லோகேஷ் கனகராஜ் இவரை வில்லனாகவும் நடிக்க வைத்தார்.
அர்ஜுன் தாஸ் நடித்த கைதி படம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற ஒரு படமாகும்.
இப்படி தமிழ் சினிமாவல் சில படங்களில் நடித்திருந்தாலும் பெருமளவில் அவருடைய கம்பீரமான குரலுக்கே ஒரு ரசிகர் பட்டாளத்தை தன்வயப்படுத்தி வைத்துள்ளார்.

நிச்சயதார்த்தம்
இந்த நிலையில், கோலிவுட்டில் ஒரு தகவல் காட்டுத்தீ போல் பரவி வருகிறது. அதாவது நடிகர் அர்ஜுன் தாஸுக்கு இந்த வாரத்தில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற உள்ளதாம்.
அதுவும் ரகசியமாக நடைபெற உள்ளதாம். இந்த நிச்சயதார்தம் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்துகொள்ள உள்ளார்களாம்.
இப்படி இருக்க அவர் திருமணம் செய்துகொள்ள உள்ள பெண் யார் என்பதை இணையவாசிகள் ஆராய்ந்து வருகின்றனர்.

நடிகர் அர்ஜுன் தாஸ் அண்மையில் காதல் சர்ச்சையில் சிக்கி இருந்தார்.
அவரும் நடிகை ஐஸ்வர்யா லட்சுமியும் காதலிப்பதாக சர்ச்சையான பேச்சுக்கள் வந்தன. ஆனால் அது வெறும் வதந்தி என இருவருமே கூறினர்.
அவர்கள் இருவரும் நெருங்கிய நண்பர்களாக பழகி வருகின்றனர் என விளக்கம் அளித்திருந்தனர்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |