மகள்களை அமர வைத்து மாட்டுவண்டி ஓட்டிய அர்ஜுன்! அரிய காணொளி இதோ
நடிகர் அர்ஜுன் தனது மகள்களுடன் மாட்டுவண்டி ஓட்டிச் சென்ற காட்சி வைரலாகி வருகின்றது.
நடிகர் அர்ஜுன்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் நடிகர் அர்ஜுன் ரசிகர்களால் ஆக்ஷன் கிங் என்று அன்புடன் அழைக்கப்படுகின்றார். இவருக்கு இரண்டு மகள்கள். முதல் மகள் ஐஸ்வர்யா திரைப்படங்களில் ஹீரோயினாக நடித்துள்ளார்.
இதேபோல், அர்ஜூனின் இரண்டாவது மகளான அஞ்சனா அர்ஜூன், உண்ணும் பழங்களின் தோல்களை கொண்டு ஹேன்ட் பேக்குகளை உருவாக்கி இருக்கிறார்.
உலகத்திலேயே இப்படி செய்வது இதுதான் முதல் முறை என்று கூறப்படும் நிலையில், இத்தகைய பெருமைக்குரிய சிறப்பால் அஞ்சனா அர்ஜூன் பலரது பாராட்டுகளை பெற்று வருகிறார்.
இந்நிலையில்தான் மகள்களை மாட்டு வண்டியில் வைத்துக்கொண்டு நடிகர் அர்ஜூன் ரெய்டு போகும் வீடியோவை அர்ஜூனின் மகள், நடிகை ஐஸ்வர்யா அர்ஜூன் தமது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
இதேபோல் அனைவரும் குடும்பமாக அவுட்டிங் சென்றுவந்த புகைப்படங்களை நடிகை ஐஸ்வர்யா அர்ஜூன் பதிவிட்டுள்ளார்.